Posts

Showing posts from September 2, 2016
TNPSC:குரூப்-4 தேர்வுக்கு இதுவரையில் ஆறரை லட்சம் பேர் விண்ணப்பம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்.8 கடைசி நாள் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இதுவரையில் 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். விண் ணப்பிக்க செப்டம்பர் 8-ம் தேதி கடைசி நாள் ஆகும். 5,451 காலியிடங்கள் தமிழக அரசின் பல்வேறு துறை களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) மற்றும் வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 5,451 காலியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அண்மையில் வெளியிட்டிருந்தது. இதற்கான ஆன்லைன் விண்ணப் பம் கடந்த ஆகஸ்டு 9-ம் தேதி தொடங்கியது. தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்ற போதிலும் பட்டதாரிகளும், முதுகலை பட்டதாரிகளும் போட்டிப்போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி, 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரி வித்தார்.ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் 8-ம் தேதி கடைசி நாள் ஆகும். இன்னும் 8
எட்டாம் வகுப்பு 'ரிசல்ட்' எட்டாம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள், வரும், 6ல் வெளியாகிறது. எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, ஏப்., மாதம், பொதுத் தேர்வு நடந்தது. இதன் முடிவு, வரும், 6ல் வெளியாகிறது. ''தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, செப்., 6 முதல், 10 வரை, அவரவர் தேர்வு எழுதிய மையங்களில், பெற்றுக் கொள்ளலாம்,'' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்து உள்ளார்.