கட்டாய இடமாற்றம்: ஆசிரியர்கள் பதற்றம். ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங், முடிவு கட்டத்தைஎட்டியுள்ளது. வரும், 27ம் தேதி கட்டாய இடமாற்றம் நடக்கிறது; இதில், ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு அதிரடியாக மாற்றப்பட உள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு ஒருமுறை விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது. கடந்த, 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு கவுன்சிலிங்கில், முக்கிய காலியிடங்கள் மறைக்கப்படாமல், ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். வரும், 27 முதல், 29ம் தேதி வரை, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், பணி நிரவல் எனப்படும், கட்டாய இடமாற்றம் செய்யப்படுகிறது. அதிக அளவில்... : ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, இத்தனை ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்ற விகிதாச்சாரம் உள்ளது. அதையும் மீறி, சில மாவட்டங்களில், அதிகளவில் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அவர்களை கணக்கெடுத்து, ஆசிரியர் பற்றாக்குறை உள்ள மாவட்ட பள்ளிகளுக்கு மாற்றுவதே, பணி நிரவல் கலந்தாய்வு என, கூறப்படுகிறது. அதன்படி, பள்ளிக் கல்வித்துறை எடுத்துள்ள பட்டியலில், 3,000 ஆசிரியர்கள் வரை, சில மாவட்டங
Posts
Showing posts from August 25, 2016
- Get link
- X
- Other Apps
புவியியல் பட்டதாரி ஆசிரியர் சங்கம், வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர் சங்கம், மாவட்ட பதிவுமூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கம் இணைந்து நடத்தும் "ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம்" நாள் :30/08/2016 இடம் : சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை, சென்னை. மே மாதம் 2010ல் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் வாரீர்! வாரீர் !!வாரீர் !!!
- Get link
- X
- Other Apps
TET(update news) : சிறுபான்மைக்கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு பொருந்தாது!சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெரும் சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் தகுதி தேர்வுகள் எழுத தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் 300 பேர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குலுவாலி ரமேஷ், முரளிதரன் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டம் சிறுபான்மை பள்ளிகளுக்கு பொருந்தாது என்பதால் அதில் பணிபுரியும் ஆசிரியர்களை தகுதி தேர்வு எழுதுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என்ற மனுதாரர்களின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. கட்டாய உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மை மற்றும் அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுத வேண்டும் என கடந்த 2011-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 2011-ம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதி தேர்வு எழுதுவது கட்டாயம் என்றும் இல்லை என்றால் அவர்களுக்கான சலுகைகள் நிறுத்தப்படும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளதாக மனுதாரர்கள் மனுவ