Posts

Showing posts from August 23, 2016
புதிதாக 5 தொடக்கப் பள்ளிகள் ,19 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்வு-முதல்வர் அறிவிப்பு. தமிழகத்தில் புதிதாக 5 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தெரிவித்தார்.தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததாவது, தமிழகத்தில் புதிதாக 5 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும். ஏற்கனவே இயங்கி வரும் 3 தொடக்க பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.19 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.
19 ஆயிரம் கிளார்க் வேலை: பொதுத்துறை வங்கிகள் அறிவிப்பு வெளியீடு. பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் ஆக பணிபுரிய விரும்பும் பட்டதாரி இளைஞர்கள், ஐ.பி.பீ.எஸ்., எனப்படும் ‘இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பர்சனஸ் செலக்சன்’ நடத்தும் தேர்வை எழுதலாம்! மொத்தப் பணியிடங்கள்:19,243 (தமிழகத்தில் மட்டும் 1,032) வயது வரம்பு:20 வயதிலிருந்து 28 வயதுக்குள் இருத்தல் வேண்டும். வயது வரம்பு சலுகையும் உண்டு. கல்வித்தகுதி:அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் இளநிலை பட்டம்பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அறிவு:கணினி அறிவியல் பாடத்தை சான்றிதழ் அல்லது டிப்ளமோ படிப்பாக படித்திருக்க வேண்டும். அல்லதுபட்டப் படிப்பில் கணினி அறிவியல் பாடத்தை ஒரு பாடமாக பயின்றிருக்க வேண்டும். கணினியில் பணியாற்றும் திறன் பெற்றிருப்பதும் அவசியம். மாற்றுத்திறனாளி மாணவர்களும்இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பங்கேற்கும் வங்கிகள்:அலகாபாத் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி, சிண்டிகேட் வங்கி, ஆந்திரா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,யூகோ(யு.சி.ஒ.,) வங்கி, பேங்க் ஆப் பரோடா,
பி.எட்., கவுன்சிலிங்கில் இன்ஜி., பட்டதாரிகளுக்கு சலுகை பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நேற்று துவங்கியது. இதில், இன்ஜி., மாணவர்களுக்கு, உயிரியல் பாடத்தில் பி.எட்., படிக்க அனுமதி வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பி.எட்., கல்லுாரி களில் உள்ள, 1,777 இடங்களுக்கு, சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரியில் நேற்று, பி.எட்., கவுன்சிலிங் துவங்கியது. முதல் நாளில், மாற்றுத்திறனாளிகளுக்கான சேர்க்கை நடந்தது. மற்ற பாடங்களுக்கு, இன்று துவங்கி, 30ம் தேதி முடிகிறது. இந்த ஆண்டு, பி.இ., - பி.டெக்., படித்த இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு, 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் பாடங்களில் ஏதாவது ஒன்றை இன்ஜினியரிங்கில் பிரதான பாடமாக படித்திருக்க வேண்டும். இந்த ஆண்டு விலங்கியல் மற்றும் தாவரவியல் பிரிவுகளில், 100க்கும் குறைவானவர்களே விண்ணப்பித்துள்ளதால், இன்ஜி., பட்டதாரிகளுக்கும் உயிரியல் பி.எட்., படிப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.