கவன ஈர்ப்பு போராட்டம் நாள் :30/08/2016 இடம் : சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் மே மாதம் 2010ல் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் வாரீர்! வாரீர் !!வாரீர் !!! *2010ம் ஆண்டில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 34 ஆயிரம் பி.எட் பட்டதாரிகளில், பணி நியமனம் பெற்றவர்கள் போக 8 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தகுதி தேர்வில் விலக்களித்து நேரடியாக பணி நியமனம் செய்ய வேண்டும். *அரசானை எண் :193,46,169,170ல் மொத்தம் 2054+2064+3816+1242=9176 பணியிடங்கள் பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும். *NCTE 29.07.2011அன்று ஓர் அறிக்கை வெளியட்டது அதில் 23.08.2010 முன்னர் ஆசிரியர் நியமனம் குறித்து விளம்பரமோ அல்லது நியமன நடவடிக்கைத் தொடங்கிருந்தாலோ அவர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாம் என அறிவுறுத்தியது. *இம்மனுவை விசாரித்த நீதியரசர்கள் எலிப் தர்மராவ் மற்றும் வேணுகோபால் அடங்கிய அமர்வு 07.07.2013 அன்று மனுதார்களுக்கு (94 பேர் ) தகுதித் தேர்வின்றி வருங்கால காலிப்பணியிடங்களில் பணி வழங்கிட வேண்டும் என்று உத்தரவிட்டனர். *பள்ளிக் கல்வித்துறை 90 நா
Posts
Showing posts from August 22, 2016
- Get link
- X
- Other Apps
84 லட்சம் இளைஞர்களுக்கு வேலையில்லை-விஜயகாந்த்! ‘84 லட்சம் இளைஞர்களுக்கு வேலையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது’ என்று விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார். இதுகுறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் சமீபத்தில் சொல்லப்பட்ட ஒரு புள்ளி விவரத்தின்படி மொத்தம் 84 லட்சம் இளைஞர்களுக்கு வேலையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சாதி வாரியாக தாழ்த்தப்பட்டவர்கள் 18,24,342, அருந்ததியினர்கள் 1,96,784, மலைவாழ் இனத்தினர்கள் 63,898, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்கள் 22,00,498, இஸ்லாமியர்கள் 3,24,653, பிற்படுத்தப்பட்டோர் 34,53,868, மற்றவர்கள் 2,67,821, ஆக மொத்தம் 84 லட்சம் பேர் படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மேலும் பல இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்து தங்களுடைய விவரங்களை பதிவு செய்யாமல் பல லட்சம் பேர் இருக்கிறார்கள். கடந்த வாரம் சட்டசபையில் இதுகுறித்து விவாதம் வந்தபோது அதிமுக-வினரும் திமுக-வினரும் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு விவாதித்தார்களே தவிர, ஆக்கப்பூர்வமான விவாதத்தை ந
- Get link
- X
- Other Apps
பி.எட்., கவுன்சிலிங் இன்று துவக்கம் பி.எட்., படிப்புக்கான கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பிலுள்ள, ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 1,777 இடங்களுக்கு, கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த ஆண்டு, 3,736 பேர் பி.எட்., படிக்க விண்ணப்பித்துள்ளனர். சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரி நடத்தும் இந்த கவுன்சிலிங், இன்று காலை, 9:00 மணிக்கு துவங்குகிறது. மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான இட ஒதுக்கீட்டில், மாணவர் சேர்க்கை நடக்கிறது.நாளை, தமிழ் மற்றும் ஆங்கிலம்; நாளை மறுநாள், வரலாறு பாடம் மற்றும் பி.இ., - பி.டெக்., முடித்தவர்களுக்கான, 20 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங் நடக்கிறது; 25ம் தேதி அரசு விடுமுறை. பின், 26ம் தேதி தாவரவியல் மற்றும் விலங்கியல்; 27ல், இயற்பியல், மனை அறிவியல், பொருளியல், வணிகவியல்; 28ல் வேதியியல், புவியியல், கணினி அறிவியல்; 30ல் கணித பாடங்களுக்கு கவுன்சிலிங் நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது