Posts

Showing posts from August 21, 2016
நாடு முழுவதும் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: மத்திய அமைச்சர் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி, உயர் கல்வி நிலையங்களில் சுமார் 8 முதல் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்தார். உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் அகில பாரதிய பிராமண மகாசபை நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நமது நாட்டில் கல்விக் கொள்கை முறையாக அமல்படுத்தப்படவில்லை. அடுத்தடுத்து அமைந்த அரசுகளும் அதனை முறையாக மறுஆய்வு செய்யவில்லை. முக்கியமாக 1976-ஆம் ஆண்டுக்குப்பிறகு கல்விக்கொள்கை மறுஆய்வு செய்யப்படவே இல்லை. இப்போதைய அரசு கல்வித் துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து வருகிறது. உயர் கல்வியைப் பொறுத்தவரையில் பல்கலைக்கழகங்களில் இணைக்கப்படும் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கல்வித் தரத்தைப் பேண முடிவதில்லை என்ற பிரச்னை உள்ளது. இதனைத் தீர்க்கும் வகையில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும்தான் கல்லூரிகளை இணைக்க வேண்டும் என்ற யோசனை...
கற்பித்தல் தவிர வேறு பணி கூடாது : ஆசிரியர்களுக்குதடை 'பாடம் நடத்துவதை தவிர வேறு பணிகளில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கற்பித்தல் பணி தவிர, நிர்வாகம் சார்ந்த பல பணிகளிலும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் வாக்காளர் கணக்கெடுப்பு, ஜாதி வாரி கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துதல், மாணவர்களுக்கு அரசின் இலவசங்களைப் பெற்று வழங்குதல் போன்ற பணிகளையும் செய்கின்றனர். 'தேர்தல் சார்ந்த பணிகள், மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிகள் தவிர, கற்பித்தல் அல்லாத பணிகளில் ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது' என, கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ' இதை, பள்ளிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும்' என, மனிதவள மேம்பாட்டு துறை இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா, பார்லிமென்டில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார். அதனால், 'தமிழக பள்ளிக் கல்வித்துறை, அரசின், 14 வகை நலத் திட்டங்களுக்கு ஆசிரியரை பயன்படு...
TNTET:வழக்கு தொடர்பான சர்வீசை முடிக்காத வழக்கறிஞர்கள் வரும் 2 வாரங்களில் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு. உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் கடந்த ஆகஸ்ட் 05 ம் தேதி விசாரணைக்கு வந்தது. இவ்விசாரணையில், வழக்கு தொடர்பான சர்வீசை முடிக்காத வழக்கறிஞர்கள் வரும் 2 வாரங்களில் சர்வீசை முடிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.
மின் வாரிய தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு மின் வாரியம், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப, எழுத்து தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்டை' வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து, மின் வாரிய செய்திக் குறிப்பு: இளநிலை உதவியாளர் - கணக்கு, நிர்வாகம்; தொழில்நுட்ப உதவியாளர், களப்பணி உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான எழுத்து தேர்வு, இம்மாதம், 27 மற்றும், 28ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தோர், 'ஹால் டிக்கெட்டை' www.tangedcodirectrecruitment.i nஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 044 - 2235 8311, 2235 8312 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அரசுப் பணியாளர் சங்கத்துடன் 2 சங்கங்கள் இணைப்பு: கு.பாலசுப்பிரமணியன் தகவல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்துடன் 2 சங்கங்கள் இணைய உள்ளதாக அந்தச் சங்கத்தின் சிறப்புத் தலைவர் தெரிவித்தார். கடலூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்துடன் தமிழ்நாடு அரசு ஊழியர் ஐக்கிய சங்கம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் (மு.செ.கணேசன் பிரிவு) ஆகிய 2 சங்கங்களும் இணைய சம்மதம் தெரிவித்துள்ளன. இதற்கான இணைப்பு விழா வரும் 27-ஆம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது.பொதுச் சங்கங்கள் ஒன்றிணைவதால் சங்கங்களின் கோரிக்கைகள் வலுப்பெறும் என்பதால், கொள்கை அடிப்படையில் இந்த இணைப்பு நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சார்பு சங்கமான டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில மாநாடு விழுப்புரத்தில் வரும் 28-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் டாஸ்மாக் கடைகளை மூடுவதால் வேலை இழக்கும் பணியாளர்களுக்கு அரசுத் துறையில் காலியாக உள்ள இடங்களில் கல்வித் தகுதியின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும். தாற்காலிமாக பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்...