Posts

Showing posts from August 13, 2016
குரூப்-4 தேர்வு: வயது வரம்பில் சலுகை வழங்கக் கோரிக்கை. டிஎன்பிஎஸ்சி. குரூப்-4 தேர்வுக்கு 10-ஆம்வகுப்பு படித்தவர்களுக்கு வயது வரம்பில் சலுகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர். நில அளவர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட 5,451 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  இதற்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பொதுப்பிரிவினராக இருந்தால் 30 வயதும், பிற்படுத்தப்பட்ட, மிகவும்பிற்படுத்தப்பட்ட பிரிவினராக இருந்தால் 32 வயதும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினராக இருந்தால் 35 வயதுக்குள்ளும் இருந்தால் மட்டுமேவிண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து ஆயக்குடி இலவசப் பயிற்சி மையத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கு விடுக்கப்பட்டுள்ளகோரிக்கையில், குரூப்-4 தேர்வுக்கான தகுதி 10 ஆம் வகுப்பு என்ற நிலையில் இத்தேர்வை ஏராளமானோர்எழுத விரும்புகின்றனர்.  ஆனால் வயது கட்டுப
பி.எட்., கவுன்சிலிங் 22ம் தேதி துவக்கம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட்., படிப்பிற்கான கவுன்சிலிங் வரும் 22ல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழு அரசு கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கான பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை, சென்னை, லேடி வெலிங்டன் கல்லூரி நடத்துகிறது. இந்த ஆண்டு, 1,777 இடங்களில் சேர, 4,002 பேர் விண்ணப்பம் பெற்றனர்; அவர்களில், 3,736 பேர் விண்ணப்பித்துள்ளனர்; இதில், 154 பேர் இன்ஜினியரிங் பட்டதாரிகள். மாணவர் சேர்க்கை செயலர் தில்லைநாயகி வெளியிட்ட அறிவிப்பு: பி.எட்., கவுன்சிலிங், வரும், 22 முதல், 30 வரை நடக்க உள்ளது. முதல் நாளில், மாற்று திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கவுன்சிலிங் நடக்கும். விண்ணப்பதாரர்களின், 'கட் - ஆப்' மதிப்பெண் வரும், 17ம் தேதி, லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரி இணையதளத்தில், ( www.ladywillingdoniase.com) வெளியாகும். விண்ணப்பதாரர்களுக்கு, தபால் மூலமும், மொபைல் போன் எஸ்.எம்.எஸ்., மூலமும், அழைப்பு தகவல் அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
'செட்' தேர்வு முடிவு தாமதம் : பாதிக்கப்படும் பட்டதாரிகள். உதவி பேராசிரியர் தகுதிக்கான, 'செட்' தேர்வு முடிவுகள், இன்னும் வெளியிடப்படாததால், பேராசிரியர் பணிக்கு செல்ல முடியாமல் பட்ட தாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் , 192உதவி பேராசிரியர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன; இதற்கு வரும், 17ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன; செப்., 7க்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அளிக்க வேண்டும். ஆனால், விண்ணப்பிக்க முடியாமல் இளம் பட்டதாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். காரணம், பேராசிரியர் பணியில் சேர்வதற்கான, 'செட்' தகுதி தேர்வு, கடந்த பிப்ரவரியில் நடந்தது; 85 ஆயிரம் பேர் எழுதினர். ஆனால், தேர்வு நடந்து ஆறு மாதங்கள் ஆகியும், இன்னும் முடிவுகள் வெளியிடப்படவில்லை. அதனால், உதவி பேராசிரியர் பணிக்கு, விண்ணப்பிக்க முடியாமல், அவதிக்குஆளாகி உள்ளனர். அதேபோல், மனோன்மணியம், பாரதியார் உள்ளிட்ட பல பல்கலைகளும், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. பலருக்கு தகுதிஇருந்தும், செட் தேர்வு முடிவு தாமதத்தால், பணிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏ