பிளஸ் 2 கணிதம், அறிவியலுக்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம்: அடுத்த ஆண்டு முதல் அமலாகிறது பிளஸ் 2 வகுப்பில் கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களுக்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வரும் கல்வியாண்டு (2017-18) முதல் அமலுக்கு வருகிறது.நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பாடத்திட்டம் தற்போது அமலில் இருந்து வருகிறது. இதனால் மாநில பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் பிளஸ் 2 முடித்த பின், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு எழுதும்போது மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.அடுத்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இத்துடன் ஏற்கெனவே தேசிய பொறியியல் கல்வி நிறுவனங்களில் சேர கூட்டு நுழைவுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதனால் கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களுக்கு அனைத்து மாநிலங்களிலும் ஒரே பாடத்திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.முன்னதாக, இந்த ஒரே பாடத் திட்டம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் தேசிய அளவிலான கல்வி ஆலோசனைக் குழு அமைக்கப்பட் டிருந்தது. தெலங்கானா மாநில மேல்நிலைக் கல்வி வாரிய செய லாளர் ஏ.அசோக் தலைமையிலான இந்தக் குழு கணிதம், அறிவ
Posts
Showing posts from August 12, 2016