Posts

Showing posts from August 10, 2016
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்கை துரிதமாக முடிக்க நடவடிக்கை சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் தகவல் சட்டசபையில் நேற்று நடந்த பள்ளிகல்வித்துறை, உயர்கல்வித்துறை, விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலத்துறை மீதான விவாதத்தில் பங்கேற்று காங்கிரஸ் உறுப்பினர் ஜெ.ஜி.பிரின்ஸ்(குளச்சல்தொகுதி)பேசினார் ஆசிரியர் தகுதித்தேர்வு 3 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ளது. அதைஉடனே நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்,ஆசிரியர்கள் நியமனத்தில் 50சதவீதம் சீனியாரிட்டி அடிப்படையிலும், 50சதவீதம் தகுதித்தேர்வு வெற்றியின் அடிப்படையிலும் நியமிக்கவேண்டும்” என்றார்.  அதற்கு பதில் அளித்த அமைச்சர் பென்ஜமின், “ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இந்த வழக்கை துரிதமாக நடத்தி முடிக்க தமிழக அரசு சார்பில் வக்கீல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த வழக்கு முடிந்த பின்னர் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்”என்றார்.
ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சட்டசபையில் அமைச்சர் விளக்கம். ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்து பேசிய கல்வித்துறை அமைச்சர் பெஞ்சமின் கூறியதாவது: ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கினை விரைந்து முடிக்க அரசு சிறப்பு கவனம் செலுத்திவருகிறது. இதற்காக அரசு சார்பில் அனுபவம்வாய்ந்த வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.எனவே வழக்கு விரைவில் முடிக்கப்பட்டு மீண்டும் தகுதித்தேர்வு நடத்தப்படும் என்று கூறினார்.