Posts

Showing posts from August 5, 2016
தேர்வு வாரியத்தால் தாமதம் 2,316 சிறப்பாசிரியர், முதுகலை ஆசிரியர் பணிக்கு தேர்வு எப்போது? மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் 2,316 சிறப்பு ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர்களை தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் தாமதித்து வருகிறது. இந்த தேர்வு எப்போது நடக்கும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சிப் பள்ளி விரிவுரையாளர்கள். முதுநிலை விரிவுரையாளர்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆகியோர் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில் 1,254 சிறப்பு ஆசிரியர்கள் (தையல், ஓவியம், உடற்கல்வி, இசை ஆசிரியர்கள்) பணியிடங்கள், 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 2,316 பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்ப பள்ளி கல்வித்துறை கடந்தாண்டு முடிவு செய்தது. இதற்கு பாடப்பிரிவு வாரியாக காலியிடங்கள் பட்டியலும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் உடனடியாக ஒப்படைக்கப்பட்டது. இதில் சிறப்பாசிரியர் பாடப்பிரிவில் உடற்கல்...
TET தேர்வு காலக்கெடு நீட்டிக்கப்படுமா? மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான என்.சி.டி.இ., உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஆசிரியர்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், 'என்.சி.டி.இ.,யின் உத்தரவு சரி' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, கட்டாய கல்விச் சட்டத்தின் படி, '2011க்கு பின், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும், 2016 நவம்பருக்குள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும்.இல்லையென்றால், அவர்கள் ஆசிரியராக பணியாற்ற முடியாது' என தெரிவிக்கப்பட்டது. இதில், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் உள்ள, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களில் பெரும்பாலானோர், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில், தமிழக அரசின் காலக்கெடு ...