தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் சிறுபான்மை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் சிறுபான்மை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியை தூத்துக்குடி சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் கீழ் புதுக்கோட்டையில் பெரியநாயகம் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளியான இந்த பள்ளியில் கடந்த 13.12.2011 அன்று பட்டதாரி ஆசிரியையாக தூத்துக்குடி அரசடி பனையூரைச் சேர்ந்த பூமணி என்பவர் நியமிக்கப்பட்டார்.இவரது நியமனத்தை அங்கீகரிக்கும்படி பள்ளி நிர்வாகம் தூத்துக்குடி கல்வி மாவட்ட அதிகாரிக்கு மனு அனுப்பியது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பூமணி தேர்ச்சி பெறவில்லை என்று கூறி அவரது நியமனத்தை அங்கீகரிக்க மறுத்து 5.6.2014 அன்று கல்வி அதிகாரி உத்தரவிட்டார். ஐகோர்ட்டில் மனு சிறுபான்மை பள்ளியில் நியமிக்கப்படும்ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு உ...
Posts
Showing posts from August 1, 2016
- Get link
- X
- Other Apps
பி.எட். கலந்தாய்வு: இன்று முதல் விண்ணப்பம் பி.எட். மாணவர் சேர்க்கை ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை முதல் விநியோகிக்கப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் 21 அரசு, அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 1,777 அரசு ஒதுக்கீட்டு பி.எட். இடங்களில் 2016-17ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 3-வது வாரத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 1 முதல் 9-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் நேரிலும், தபாலிலும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் "விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி), காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600005' என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும். அதன் பிறகு வந்துசேரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பி.இ. பட்டதாரிகளுக்கு 20 சதவீதம்: தமிழக அரசின் அரசாணைப்படி, 2015-16 கல்வியாண்டு முதல் பொறியியல் பட்டதாரிகளும் பி.எட். படிப்புகளில் சேர்க்கப்படுகின்றனர். நிகழாண்டில் இவர்களுக்கு இயற்பியல் அறிவியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல் ஆகி...
- Get link
- X
- Other Apps
"செட்' தேர்வில் வெளிப்படை தன்மை தேவை! வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய, "செட்' தேர்வுக்கான விடைகள், விடைத் தாள் நகல்கள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெற அகில இந்திய அளவில் "நெட்' தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியமும் (சி.பி.எஸ்.இ.), மாநில அளவில் "செட்' தேர்வும் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் "செட்' தேர்வு நடத்தும் அனுமதி கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பல்கலைக்கழகத்துக்குக் கிடைத்தது. கடந்த பிப்ரவரி 21-இல் நடைபெற்ற "செட்' தேர்வை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். சர்ச்சையும், சந்தேகங்களும்...: இந்த நிலையில், பணம் கொடுத்து "செட்' தேர்வில் தேர்ச்சி பெற முயற்சிகள் நடைபெறுவதாக, பல்கலைக்கழக மானியக் குழுவிடம் (யு.ஜி.சி.) புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதுதவிர, "நெட்'தேர்வில் கேள்வித் தாளை தேர்வர்களே எடுத்துச் செல்ல அனுமதியும், தேர்வு முடிந்து ஒரு வாரத்தில் விடைகளும், த...