உதவிப் பேராசிரியர்கள் மாநில தகுதி தேர்வு முடிவை வெளியிட ஐகோர்ட் உத்தரவு 'உதவிப் பேராசிரியர்கள் நியமனத்திற்கான மாநிலத் தகுதித் தேர்வு முடிவை தமிழக அரசு வெளியிட வேண்டும்' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மணலிக்கரை அந்தோணி குமார் தாக்கல் செய்த மனு: பல்கலை மானியக்குழு விதிகள்படி பல்கலை, கல்லுாரி உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்காக மாநில அளவிலான தகுதித் தேர்வு (டி.என்.எஸ்.இ.டி.,) நடத்தப்படுகிறது. நான் எம்.பில்., படித்துள்ளேன். 2016 பிப்., 21ல் மாநில தகுதித் தேர்வில் பங்கேற்றேன். ஐந்து மாதங்களாக தேர்வு முடிவு வெளியாகவில்லை.தேர்வு முடிவை வெளியிட நடவடிக்கை கோரி தமிழக உயர்கல்வித்துறை செயலர் மற்றும் மாநில தகுதித் தேர்வு உறுப்பினர் செயலருக்கு, மனு அனுப்பினேன். நடவடிக்கை இல்லை. மனுவை பரிசீலித்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார். நீதிபதி டி.ராஜா, 'தேர்வு முடிவை, நான்கு வாரங்களில் வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
Posts
Showing posts from July 30, 2016