Posts

Showing posts from July 29, 2016
30 இளநிலை அறிவியல் அதிகாரி பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு தமிழக அரசின் தடய அறிவியல் சார்புநிலை சேவை பிரிவில் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ள 30 இளநிலை அறிவியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைனில் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிக்கை எண்:11/2016விளம்பர எண்:441தேதி:29.07.2016 பணி:Junior Scientific Officer காலியிடங்கள்:30 சம்பளம்:மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,800 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 1. Biolpgy - 06 2. Chemistry - 22 3. Physice - 02 தகுதி:சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வுக் கட்டணம்:ஒரு முறை பதிவுக் கட்டணம்: ரூ.50. தேர்வுக் கட்டணம் ரூ.100. வயதுவரம்பு:01.07.2016 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.net / www.tnpscexams.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:16.10.2016 அன்று ...
பி.எட்.,க்கு நுழைவுத் தேர்வு தரமான ஆசிரியர்களை உருவாக்கும் வகையில், நுழைவுத் தேர்வின் மூலம் பி.எட்., படிப்பில் மாணவர்களை சேர்க்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பயிற்சிக்கான பி.எட்., படிப்பை, இரண்டு ஆண்டுகளாக மாற்றி, மத்திய அரசு உத்தரவிட்டது; புதிய பாடத்திட்டமும் அறிமுகமானது. இதன் தொடர்ச்சியாக, பி.எட்., படிப்பை தரமானதாக மாற்றவும், சிறந்த ஆசிரியர்களை உருவாக்கவும், மேலும் சில மாற்றங்களை கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் முன்னாள் தலைவர் எம்.ஏ.சித்திகி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை, மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. * ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசு சார்பில், இரண்டு ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள் கண்டிப்பாக அமைக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும், ஆசிரியர் கல்வியியல் பல்கலை அமைக்க வேண்டும் * பி.எட்., படிப்புக்கு தேசிய அளவில் நுழைவு மற்றும் தகுதி தேர்வு நடத்தப்பட்டு, மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவோருக்கு, உதவித்தொகை வழங்க வேண்டும் * எம்.எட்., படிப்பு காலம், இரண்டு ஆண்...
கல்வி கொள்கை குறித்து கருத்து ஆகஸ்ட் 16 வரை அவகாசம் புதிய கல்விக் கொள்கை குறித்து, ஆக., 16 வரை கருத்து தெரிவிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.இருபது ஆண்டு பழமையான கல்விக் கொள்கையை மாற்ற, மத்திய அரசின் சார்பில், கல்வியாளர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியம் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி, ஆசிரியர்களுக்கு கட்டாய திறனறி தேர்வு நடத்துதல், சிறுபான்மை கல்வி நிறுவனங்களும், மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்றுதல், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை அனுமதித்தல் உள்ளிட்ட, பல பரிந்துரைகளை அளித்துள்ளது. இதன் முக்கிய அம்சங்களை, ஒரு மாதத்திற்கு முன், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டது. அதற்கு, பல தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து, பொதுமக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்களின் கருத்துக்களை, ஜூலை, 31 வரை மத்திய அரசுக்கு அனுப்பலாம் என, உத்தரவிடப்பட்டது. இப்போது, ஆசிரியர் கூட்டமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, ஆக., 16 வரை, மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது. கருத்துக்களை, nep.edu@ gov.in என்ற மத்திய அரசின் இ - மெயில் முகவரிக்கு தெரிவிக்கலாம்