Posts

Showing posts from July 28, 2016
5 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப குரூப் - 4 தேர்வு: ஒரு வாரத்துக்குள் அறிவிப்பு 2016-17ம் ஆண்டுகளில் எந்தெந்த பதவிகளுக்கு எப்போது எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, இறுதித் தேர்வு முடிவுகள் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் (டிஎன்பி எஸ்சி) ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிடப் பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வுகளில் அதிக எண்ணிக்கையிலான காலிப் பணியிடங்கள் குரூப் - 4 தேர்வு மூலமாக நிரப்பப்படும். அந்த வகை யில், வருடாந்திர தேர்வுகால அட்டவணையின்படி, குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 3-வது வாரம் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். இன்னும் அறிவிப்பு வெளியாகாததால் குரூப்-4 தேர்வுக்காக படித்துக்கொண்டிருக்கும் தேர்வர்கள் அறிவிப்பை ஆவலுடன்எதிர்பார்த்து உள்ளனர். இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் எம்.விஜய குமாரிடம் கேட்டபோது, “ஏறத்தாழ 5 ஆயிரம் காலி இடங்கள் குரூப் - 4 தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதுகுறித்த அறிவிப்பு ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும்” என்றார்....
10ம் வகுப்பு துணை தேர்வு இன்று 'ரிசல்ட்' பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன் - ஜூலையில் நடந்த, சிறப்பு துணைத் தேர்வு முடிவுகளை, இன்று காலை, 11:00 மணிக்கு மேல், http://www.dge.tn.nic.inஎன்ற இணையதளத்தில் மாணவர்கள் அறியலாம். தேர்வு முடிவுகளுக்கு பின், மறுகூட்டலுக்கு விரும்பும் மாணவர்கள், நாளை முதல், 30ம் தேதிக்குள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத் தில் விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு, இரு தாள்கள் உடைய பாடத்துக்கு தலா, 305 ரூபாய்; ஒரு தாள் பாடத்துக்கு, தலா, 205 ரூபாய் மற்றும், 'ஆன்லைன்' கட்டணம், 50 ரூபாய் செலுத்த வேண்டும்.
இதுவரை 79,354 ஆசிரியர் நியமனம் : அமைச்சர் தகவல் ''அ.தி.மு.க., ஆட்சியில், இதுவரை, 79 ஆயிரத்து, 354 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பெஞ்சமின் கூறினார். சட்டசபையில், தி.மு.க., உறுப்பினர் சக்கரபாணியின் கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில்: கடந்த, 2011 முதல், அ.தி.மு.க., ஆட்சியில், இதுவரை நேரடியாகவும், பதவி உயர்வு மூலமாகவும், 79 ஆயிரத்து, 354 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம், தொடக்கப் பள்ளிகளில், தேசிய சராசரியான, 30 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரம், 1:25 என, குறைந்துள்ளது. அதேபோல, இடைநிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், தேசிய சராசரியை விட, நம் சராசரி சிறப்பாக உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.