Posts

Showing posts from July 24, 2016
தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சிக்கலா? ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல் கேட்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் புலம்புகின்றனர். அரசு உதவி பெறும் சிறுபான்மை மற்றும் பிற உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 23.8.2010 முதல்14.11.2011 முடிய மற்றும் 15.11.2011 முதல் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் பெற்றனர். இவர்களில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விபரம் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு தகுதியின்றி நியமனம் செய்யப்பட்டவர்கள் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் பட்டியலை பெற்று முதன்மைக்கல்வி அலுவலர்கள் அனுப்ப வேண்டும், என இடைநிலைக்கல்வி இணை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளார். இதனால், இதுவரை தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.
கல்வி அலுவலர் தேர்வு முடிவு; காத்திருக்கும் ஆசிரியர்கள். தமிழக பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கு, தேர்வு எழுதி, ஓராண்டாக, 3,000 ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர். தமிழகத்தின் பல மாவட்டங்களில், 11 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழக பள்ளிக் கல்வித்துறை இக் காலியிடங்களை நிரப்ப, 2014ம் ஆண்டில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் முதல்நிலை எழுத்து தேர்வு நடத்தியது. இத்தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் எழுதினர். தேர்வு எழுதி ஓராண்டு ஆனபின், கடந்த ஆண்டு, மே மாதம் தேர்வு முடிவு வெளியானது. இதில், 3,000 ஆசிரியர்கள் வெற்றி பெற்றனர். அடுத்த கட்டமாக இவர்கள் கடந்த ஆக., மாதம், சென்னையில் முதன்மைத் தேர்வு எழுதினர். தேர்வு எழுதி முடித்து, ஓராண்டு முடிவடையும் நிலையில் இன்னும் முடிவு வெளியாகவில்லை. இந்த தேர்வு முடிவை எதிர்பார்த்து, 3,000 ஆசிரியர்களும் காத்திருக்கின்றனர். இதுகுறித்து தேர்வு எழுதிய ஆசிரியர்கள் சிலர் கூறுகையில் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் விரைவாக முதன்மை தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். தேர்வானவர்க...
ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு துவங்கியது.....பேரம்! .எட்டு மாவட்டங்களில் தரகர்கள் முகாமிட்டு 'வசூல்!'-DINAMALAR சென்னை,: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்களது விருப்பத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த ஆண்டு கவுன்சிலிங் தேதியை, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார். தேதி அறிவித்த உடனேயே, அதிக கிராக்கி உள்ள எட்டு மாவட்டங்களில் இடைத்தரகர்கள் முகாமிட்டு, 'வசூல்' வேட்டையில் இறங்கி விட்டனர். ஆசிரியர் இடமாறுதலுக்கு, ஜூலை, 19 முதல், முதன்மை கல்வி அலுவலகத்தில், ஆசிரியர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்; 28ம் தேதி வரை அவகாசம் உள்ளது. அடுத்த மாதம், 6ம் தேதி கவுன்சிலிங் துவங்குகிறது. * அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஆக., 6ல்,மாவட்டத்திற்குள்ளும், பிற மாவட்டங்களுக்குமான இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கும். * அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஆக., 7ல், பதவி உயர்வு கவுன்சிலிங்கும், உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு, ஆக., 13ல், மாவட்டத்திற்குள்ளேயும், வெளியிலும் க...
'நிரந்தர ஆசிரியர் இல்லாவிட்டால் அங்கீகாரம் கிடையாது!' : பி.எட்., கல்லூரிகளுக்கு பல்கலை எச்சரிக்கை 'நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காவிட்டால், அங்கீகாரம் கிடையாது' என, அனைத்து பி.எட்., கல்லுாரிகளுக்கும், ஆசிரியர் கல்வியியல் பல்கலை எச்சரிக்கை விடுத்துள்ளது. கலை மற்றும் அறிவியலில், இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பு முடித்தவர்கள், பள்ளி ஆசிரியராக சேர, பி.எட்., என்ற ஆசிரியர் கல்வியியல் படிப்பை முடிக்க வேண்டும். கடந்த கல்வி ஆண்டுக்கு முன் வரை, இந்த படிப்பு, ஓராண்டு காலமாக நடத்தப்பட்டது. ஆனால், மத்திய அரசின் புதிய பாடத்திட்டத்தின் படி, கடந்த ஆண்டு முதல், பி.எட்., படிப்பு, இரண்டு ஆண்டு படிப்பாக மாற்றப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 690 பி.எட்., கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் பல கல்லுாரிகளில், எம்.எட்., படிப்பும் நடத்தப்படுகிறது. 'இரண்டு ஆண்டு படிப்புகளை நடத்தும் வகையில், பல கல்லுாரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை; நிரந்தர கல்லுாரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை' என, ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, அனைத்து கல்லுா...
உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அவகாசம் முதுநிலை கணிதப் படிப்பு படிப்போருக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, வரும், 29ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. தேசிய உயர்கல்வி கணித வாரியம் சார்பில், கணிதப் படிப்புகளை ஊக்குவிக்க உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, எம்.ஏ., மற்றும் எம்.எஸ்சி.,யின் கணித பிரிவு படிப்போருக்கான உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் அனுப்ப, 29ம் தேதி கடைசி நாள் என, கணித வாரியம் அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, செப்., 17ல் உதவித்தொகை பெறுவோருக்கான தேர்வு நடக்கிறது. இதற்கான கூடுதல் தகவல்களை, http://www.nbhm.dae.gov.inஎன்ற இணையதளத்தில் அறியலாம்.