செப்டம்பர் 2 வரை பேரவை கூட்டத் தொடர்:பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவிப்பு தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார். சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதற்காக பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களுக்கு பேரவைத் தலைவர் பி.தனபால் அளித்த பேட்டி: தமிழக சட்டப் பேரவை வரும் 25-ஆம் தேதி மீண்டும் கூடுகிறது. மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு அன்றைய தினம் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு பின்னர், கூட்டம் தொடங்கும். திங்கள்கிழமை முதல் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெறும். இந்த விவாதமும், விவாதத்துக்கான பதிலுரையும் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 29) வரை நடைபெறும். நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்களுக்கு, நிதியமைச்சரும், அவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வம் பதிலளிப்பார். மானியக் கோரிக்கைகள்: ஆகஸ்ட்...
Posts
Showing posts from July 22, 2016
- Get link
- X
- Other Apps
'குரூப் 1' தேர்வு: 'ஹால் டிக்கெட்' வெளியீடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் 1' தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: துணை கலெக்டர், டி.எஸ்.பி., மற்றும் உதவி கமிஷனர், மாவட்ட பதிவாளர் ஆகிய பதவிகளில், 74 காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், பணியிடம் நிரப்ப, கடந்த ஆண்டு, ஜூலை, 10ம் தேதி அறிவிப்பு வெளியானது. இதற்கான முதன்மை எழுத்து தேர்வு, வரும், 29, 30 மற்றும், 31ம் தேதிகளில், சென்னையில், 38 தேர்வு மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வில் பங்கேற்க தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, தேர்வுக்கான ஹால் டிக்கெட், தேர்வாணைய இணையதளங்கள், www.tnpsc.gov.inமற்றும் www.tnpscexams.netஆகியவற்றி-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் அல்லது பதிவு எண்ணை உள்ளீடு செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்த சந்தேகங்களுக்கு, 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது, contacttnpsc@gmail.comஎன்ற மின் அஞ்சல்...