Posts

Showing posts from July 16, 2016
கல்விக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல் மாணவர்களின் கல்விக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு: கல்விக்கடனை உடனடியாக திருப்பிச் செலுத்த வேண்டும் என்று தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கொடுத்த துன்புறுத்தல் தாங்க முடியாமல் மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர் லெனின் தற்கொலை செய்துக் கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வங்கி அதிகாரிகளின் இந்த கெடுபிடி வசூல் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. மாணவனை இழந்து தவிக்கும் அவரது பெற்றோருக்கும், உறவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். “வங்கிகள் குண்டர்கள் அல்லது வசூல் ஏஜெண்டுகளைப் பயன்படுத்தி கடன் பெற்றவர்களிடம் பறிமுதல் செய்யக் கூடாது” என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது. “வசூல் ஏஜெண்டுகள்” குறித்து இந்திய ரிசர்வ் வங்கியும் தெளிவான அறிவுரைகளை வங்கிகளுக்கு வ
பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு. *.மாறுதல் விண்ணப்பங்கள் ஜுலை 19 முதல் 28 வரை விண்ணப்பிக்கலாம். தொடக்க கல்வி துறை *.3.8.16 - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல் *.4.8.16 - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு *.6.8.16 - நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் & பதவி உயர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர் மாறுதல் *.7.8.16 - தொடக்கப்பள்ளி தலைமை யாசிரியர் மாறுதல் & பதவி உயர்வு *.20.8.16 - பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) *.21.8.16 - இடைநிலை ஆசிரியர் மாறுதல் மாறுதல் விண்ணப்பங்கள் ஜுலை 19 முதல் 28 வரை விண்ணப்பிக்கலாம். பள்ளிக்கல்வித்துறை 6.8.16 - மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் கலந்தாய்வு 7.8.16 - மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 13.8.16 - உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் 20.8.16 - முதுகலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்) 21.8.16 - முதுகலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) 22.8.16 - முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு 23.08.16 - உடற்கல்வி, இடை நிலை, தைய
தமிழகம் முழுவதும் 750 ஆங்கில வழி தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை. தமிழகத்தில் தொடங்கப்பட்ட 750 ஆங்கிலவழி தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை. இதனால், மாணவர்கள் தனியார் பள்ளிக்கு மாறும் நிலை உருவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் செயல் வழிக்கற்றல் 2006ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதன்முதலாக சென்னை மாநகராட்சி பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டப்பின் ஒன்றியத்திற்கு 10 பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.இதைத்தொடர்ந்து, 1ம் வகுப்பு முதல் 4ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு செயல்வழிக் கற்றல் திட்டத்தின்கீழ் கல்வி அளிக்கப்பட்டது. 2009ம் ஆண்டு செயல்வழிக் கற்றல் என்ற பாடத்திட்டத்தை எளிமையான செயல்வழிக் கற்றல் என்று மாற்றப்பட்டது. ஏழை மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் கடந்த 2013ம் ஆண்டு ஆங்கிலவழி செயல்வழிக் கற்றல் திட்டம் தமிழகம் முழுவதும் கொண்டுவரப்பட்டது. இதில் முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 10 தொடக்கப்பள்ளிகள் ஆங்கில வழிக்கல்வியாக மாற்றப்பட்டது. 2014-2015 கல்வி ஆண்டில் தமிழகம் முழுவதும் 750 தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டது. அரசு பள்ளிகளில் தொடக்கப் பள்ளிகளிலேயே