Posts

Showing posts from July 14, 2016
தமிழக பட்ஜெட் தாக்கல் எப்போது?- ஓரிரு நாளில்அறிவிப்பு வெளியாகிறது. தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என தெரிகிறது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருந்ததால், பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக 6 -வது முறையாக ஜெயலலிதா பதவியேற்றார். இந்நிலையில், 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், கடந்த ஜூன் 16-ம்தேதி ஆளுநர் ரோசய்யா உரையுடன் தொடங்கியது.ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 4 நாட்கள் நடந்தது. இறுதி நாளில் முதல்வர் ஜெயலலிதா பதிலுரை அளித்தார். அத்துடன் மறு தேதி குறிப்பிடப்படாமல் பேரவை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து 2016-17ம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதற்காக சட்டப்பேரவை கூடும் தேதி ஓரிரு நாளில் வெளியாகும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட் மீதான விவாதத்துக்குப் பிறகு துறை
பி.இ. படிப்பில் 51 ஆயிரம் பேர் சேர்க்கை: 1.34 லட்சம் இடங்கள் காலி பொறியியல் கலந்தாய்வு முடிய இன்னும் 7 நாள்களே உள்ள நிலையில், 51,428 பேர் மட்டுமே பி.இ. படிப்புகளில் இதுவரை சேர்ந்துள்ளனர். 1,34,242 இடங்கள் மாணவர் சேர்க்கையின்றி காலியாக உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் சேர்க்கை ஜூன் 27-இல் தொடங்கியது. ஜூலை 21-ஆம் தேதியோடு முடிவடைய உள்ளது.இதுவரை ஓ.சி. பிரிவின் கீழ் 25,264 பேர், பி.சி. பிரிவின் கீழ் 12,218 பேர், பி.சி.எம். பிரிவின் கீழ்1,374 பேர், எம்.பி.சி. பிரிவினர் 8,163 பேர், எஸ்.சி.பிரிவினர் 3,848 பேர், எஸ்.சி.ஏ. பிரிவினர் 470 பேர்,எஸ்.டி. பிரிவினர் 91 பேர் என மொத்தம் 51,428 பேர் மட்டுமே சேர்க்கை பெற்றுள்ளனர். கலந்தாய்வு முடிய இன்னும் 7 நாள்களே உள்ள நிலையில், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 1,32,216 இடங்கள் நிரம்பாமல் உள்ளன. அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 1,964 இடங்களும், அரசு - அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 62 இடங்களும் மாணவர் சேர்க்கையின்றி காலியாக உள்ளன.
தமிழ்ப் பல்கலை.யில் ஜூலை 20-ல் பி.எட்., எம்.எட். நேரடிச் சேர்க்கை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான நேரடிச் சேர்க்கை வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) தெ. விஞ்ஞானம் தெரிவித்திருப்பது: தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையின் வழியாக தேசிய ஆசிரியர் கல்விக் குழு (என்.சி.டி.இ.) அனுமதியுடன் நடத்தப்படும் இளங்கல்வியியல் (பி.எட்.),கல்வியியல் நிறைஞர் (எம்.எட்.) இரண்டாண்டுப் பட்டப் படிப்புகளுக்கான நேரடிச் சேர்க்கை ஜூலை 20-ம் தேதி காலை 10.30 மணியளவில் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் நடைபெறவுள்ளது. தகுதியுடையவர்கள் தங்களது அனைத்து மூலச் சான்றிதழ்கள் மற்றும் முதல் தவணைக் கட்டணத் தொகை ரூ. 26,500 ரொக்கத்துடன் நேரில் வரலாம். கல்வித் தகுதி விவரங்களை www.tamiluniversity.ac.in என்ற இணையதள முகவரியிலிருந்து பெறலாம். மேலும், விவரங்களுக்கு 04362-226720 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.