Posts

Showing posts from July 13, 2016
பழைய பென்சன் திட்டம்: தமிழக அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல் தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை: புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய பென்சன் திட்டம் தொடர்வதற்கான அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட வேண்டும். பழைய பென்சன் திட்டம் குறித்து ஆராய வல்லுநர் குழு அமைக்கப்படும் என முதல்வர் ஜெ., அறிவித்திருந்தார். இந்த வல்லுநர் குழு அமைக்கப்பட்டு 5 மாதங்கள் ஆகியும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை . இதனால் பிரச்னையை தள்ளிப்போட வேண்டும் அரசு எண்ணுகிறதோ என ஊழியர்கள் கருதுகின்றனர். இதனால் அரசு அலுவலர்கள் மிகுந்த கோபத்திலும், ஏமாற்றத்திலும் இருக்கிறர்கள் எனக்கூறியுள்ளார்.
பி.எட். கலந்தாய்வை முன்கூட்டியே நடத்தத் திட்டம்? பி.எட். சேர்க்கைக்கு ஜூலை 4-ஆம் வாரத்தில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, செப்டம்பர் 2-ஆவது வாரத்துக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்கப்படலாம் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆசிரியர் கல்வியியல் இளநிலைப் படிப்பான பி.எட். கலந்தாய்வு வழக்கமாக செப்டம்பர் கடைசி வாரத்தில் தொடங்கப்பட்டு, அக்டோபரில் முடிக்கப்படும் நிலையில் இந்த ஆண்டு விரைவாக நடைபெற உள்ளது. ஆசிரியர் படிப்பின் தரத்தை உயர்த்துவதற்காக பி.எட். படிப்பை ஓராண்டிலிருந்து இரண்டு ஆண்டுகளாக தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) உயர்த்தியுள்ளது. தமிழகத்தில் கலந்தாய்வு தாமதமாக நடத்தப்பட்டு, வகுப்புகளும் தாமதமாகவே தொடங்குவதால் பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்க முடியாமல் போவதோடு, 3-ஆம் பருவத்தில் மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய 4 மாத ஆசிரியர் பயிற்சியும் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதுமட்டுமின்றி, இந்த 4 மாத ஆசிரியர் பயிற்சிக்கு பெரும்பாலான பள்ளிகள் அனுமதியை மறுத்து வருகின்றன. அதிகபட்சம் 2 மாதங்கள் மட்டுமே அனுமதிக்கின்றனர். இதுபோன்ற பல்வேறு சிக்கல்களுக்கு ...