Posts

Showing posts from July 10, 2016
200 பள்ளிகளைத் தரம் உயர்த்த வேண்டும் தமிழகத்தில் 200 உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாகத் தரம் உயர்த்த வேண்டுமென தமிழ்நாடு முதுநிலைபட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மாநிலத்தலைவர் மணிவாசகன் தலைமையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும்,பள்ளிகளுக்கு போதிய ஆசிரியர்கள் தேவை என்ற அடிப்படையில் மேலும் 5ஆயிரம் முதுகலை ஆசிரியர்பணியிடங்களை உருவாக்கி நிரப்ப வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக மொழியாசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். ஆன்லைன் கலந்தாய்வு முறையில் உள்ள குறைகள்களையப்பட்டு முறையாக கலந்தாய்வு நடத்த வேண்டும். அகில இந்திய நுழைவு தேர்வுகளில் தமிழக மாணவர்கள் அதிகளவில் வெற்றிபெறவும், கல்வித்திறனை மேம்படுத்திடவும், 80சதவீதத்திற்கு மேல்அறிதல், புரிந்துகொள்ளுதல், திறன் வெளிப்படுத்துதல்,நடைமுறைக்கேற்ப பயன்படுத்துதல் என்ற முறையில் வினாத்தாள்கள் அமையவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மண்டலச்செயலர் செல்வம், மாவட்டச்செயலர் தாமரைச்செல்வம், அமைப்புச்செயலர் கோவிந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
" டெட்" தேர்வுகள் இல்லை ! - ஆசிரியர் தேர்வு வாரியம் திடீர் முடிவு more details your see www.ednnet.in
பி.எட். சேருவதற்கே ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியம் பி.எட். சேருவதற்கே ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியம்: கல்வித் தரத்தை மேம்படுத்த கல்வியாளர்கள் யோசனை. தகுதியான ஆசிரியர்களை, அரசுப் பள்ளிகளுக்கு தேர்வு செய்ய தமிழக அரசு பி.எட் (B.Ed), டி.டி.எட் (D.T.Ed) படித்தவர்கள் கட்டாயம் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதை கட்டாய மாக்கி உள்ளது. அதனால், தற்போது அரசு ஆசிரியர் ஆவதற்கு பி.எட், டி.டி.எட் மட்டுமே அடிப்படைத் தகுதியாக கருத முடியாது. அதேநேரத்தில், பிளஸ் 2, இள நிலை, முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் யார் வேண்டுமானா லும் பி.எட், டி.டி.எட் படிப்பில் சேரலாம், ஆசிரியராகலாம் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தனியார் பள்ளிகளில் ஆசிரியர் ஆகலாம். அதற்கு அரசு எந்தத் தடையும் விதிக்கவில்லை. அரசின் இந்த நடவடிக் கையை தனியார் பள்ளி நிர்வாகங் கள் சரியாக பயன்படுத்திக் கொண்டதால், ஆசிரியர் பயிற்சி முடித்தும் அரசுப் பள்ளிகளில் பணி வாய்ப்பு கிடைக்காதவர்கள், மாற்றுத் துறைகளுக்குச் செல்ல முடியாமல் தனியார் பள்ளிகளில் 2 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 10 ஆயிரம் ர
வரவிருக்கும் தேசிய கல்விக் கொள்கை'யில்...இனி 6-ம் வகுப்பில் இருந்துஆங்கிலக் கல்விதான்!' மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் தேசிய கல்விக் கொள்கை குறித்து, பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டுள்ளது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். 'வருகிற 31-ம் தேதிக்குள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கிறது மத்திய அரசு. இதுகுறித்து மாநில அரசு மௌனமாக இருப்பது வேதனையளிக்கிறது' என்கின்றனர் கல்வியாளர்கள். தேசிய அளவில் புதிய கல்விக் கொள்கையை வகுக்கத் திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு. இதன்படி, பிளஸ் 2 தேர்வு முடிவுகளுக்குப் பிறகும், கல்லூரி படிப்புகளில் சேர மாணவர்கள் தகுதித் தேர்வு எழுத வேண்டும்; ஆறாம் வகுப்பில் இருந்து ஆங்கிலக் கல்வி, ஐந்தாம் வகுப்பு வரையில் மட்டுமே ஆல் பாஸ் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளனர். இதுகுறித்து மத்திய அரசு, இணையதளத்தில் மட்டுமே கருத்துக் கேட்புகளை நடத்திக் கொண்டிருக்கிறது." இந்திய மொழிகளில் இதுபற்றிய அறிவிப்புகளை வெளியிடாமல், ஆங்கிலத்தில் கருத்துக் கேட்பு குறித்து விவரித்துள்ளனர். தேசிய கல்விக் கொள்கையை வரையறுப்பதில்கூட, அந்நிய ம
TNPSC:அடுத்தடுத்து தேர்வுகள் வருவதால் குரூப்-1 முதன்மை தேர்வை தள்ளிவைக்க வேண்டும் விண்ணப்பதாரர்கள் கோரிக்கை. அடுத்தடுத்து தேர்வுகள் வருவதால் குரூப்-1 முதன்மை தேர்வை தள்ளிவைக்கவேண்டும் என்று தேர்வுக்காக விண்ணப்பித்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குரூப்-1முதன்மை தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 முதன்மை (மெயின்) தேர்வு முடிவுகளை கடந்த மாதம் 17-ந் தேதி வெளியிட்டது. மேலும் நேர்முக தேர்வுக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி கடந்த 4 மற்றும் 5-ந் தேதிகளில் நடந்தது. இதற்கான நேர்முகத்தேர்வு தேதிகள் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.இந்த நிலையில் 2015-16-ம் ஆண்டுக்கான குரூப்-1 முதன்மை தேர்வு இம்மாதம் 29, 30 மற்றும் 31-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. ஏற்கனவே எழுதிய தேர்வின் நேர்முக தேர்வுக்கு தயாராகுவதா? இல்லை முதன்மை தேர்வுக்கு தயாராகுவதா? என்ற குழப்பத்தை தேர்வு எழுதுபவர்கள் இடையே ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து தேர்வுகள் முதன்மை தேர்வினை தள்ளிவைத்து 2014-15-ம் ஆண்டுக்கான நேர்முக தேர்வினை முதலில் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டோரின் பட்டியலை வெளியிடுவதன் மூலம்தேர்ந்தெ
TET நிபந்தனை ஆசிரியர்கள் - தமிழக முதலமைச்சருக்கு வேண்டுதல் மடல்: மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின்மேலான பார்வைக்காக... வணக்கம். தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நிபந்தனைகளுடன் 23.08.2010 க்குப் பிறகு அரசு, அரசு உதவி பெறும்,சிறுபான்மையினர் பள்ளிகளில் முறையாக நியமனம் பெற்று தமிழகம் முழுவதும்பணியாற்றி வரும் சுமார் மூவாயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வாழ்வாதார பாதுகாப்புவேண்டி எழுதும் கடிதம். எங்களின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டுள்ள நிலையை எடுத்துக் காட்டி நல்லதீர்வை வேண்டி இக் கடிதம் எழுதியுள்ளோம். ஆசிரியப் பணி நியமனங்களில் ஆசிரியர்தகுதித் தேர்வு நடைமுறையில் வரும் முன்னர் ஏற்கனவே பல ஆண்டுகளாக அமலில் உள்ளகல்வித் துறையின் உரிய நடைமுறைகளான அரசின் வழிகாட்டுதலுடன் அரசு பள்ளிகள்,அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளில் பட்டதாரிஆசிரியர்களாக அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக பதிவுப்பட்டியல் பெற்றும், நாளிதழ்களில் விளம்பரம், கல்வித் துறையின் அங்கீகாரம்பெற்று பள்ளிக் குழுவின் நேர்முகத் தேர்வு மற்றும்