ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும்: பள்ளிக் கல்வி அமைச்சர் உத்தரவு. ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி அமைச்சர் பா.பெஞ்சமின் உத்தரவிட்டுள்ளார். தொடக்கக் கல்வி இயக்ககத்தின் மூலம் நடப்பு கல்வி ஆண்டில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் பள்ளிக்கல்வி அமைச்சர் பா.பெஞ்சமின் தலைமையில் சென்னை டிபிஐ வளாகத்தில் நடந்தது. மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்துக்கு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா முன்னிலை வகித்தார்.தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் மைதிலி கே.ராஜேந்திரன், அனைவருக்கும் கல்வி திட்ட மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, பள்ளிக் கல்வித்துறை துணைச் செயலாளர் ராகுல்நாத், மாநில தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் மற்றும் இணை இயக்குநர்கள் கலந்துகொண்டனர். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா நலத்திட்டங்கள், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு, ஆங்கில வழிப் பிரிவ...
Posts
Showing posts from July 8, 2016
- Get link
- X
- Other Apps
அரசு பள்ளிகளில் காலியிடங்கள்: 1,250 சிறப்பாசிரியர்கள் நியமனம் எப்போது?- 2 ஆண்டு கடந்தும் நடவடிக்கை இல்லை அரசு பள்ளிகளில் போட்டித்தேர்வு மூலமாக சிறப்பாசிரியர்களை நிய மிப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு கிட்டதட்ட 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் காலியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளி களில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர்கள் பணியாற்றி வரு கிறார்கள். முன்பு இவர்கள் வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) மூலம் நியமிக்கப் பட்டு வந்தனர். ஆரம்பத்தில் மாவட்ட அளவிலான பதிவுமூப்பும், அதன்பிறகு மாநில பதிவுமூப்பும் பின்பற்றப்பட்டது.இந்த நிலையில், சிறப்பாசிரியர் களை பதிவுமூப்பு அடிப்படையில் நியமிக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கடந்த 9.6.2014 அன்று ஓர் உத்தர வைப் பிறப்பித்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, சிறப்பாசிரி யர்களை போட்டித்தேர்வு மூலம் நியமிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, எழுத்துத்தேர்வு நேர்முகத்தேர்வு அடிப்படையில் சிறப்பாசிரியர்களை நியமிக்கும் வகையில் கடந்த 17.11.2014 அன்...
- Get link
- X
- Other Apps
லஞ்சமின்றி கலந்தாய்வு நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் நாளை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் அரசியல் தலையீடு மற்றும் லஞ்சமின்றி இடமாறுதல் கலந்தாய்வை உடனே அறிவித்து நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாளை ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை சார்பில் ஆண்டு தோறும் மே அல்லது ஜூன் மாதம் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடத்தி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இக்கலந்தாய்வு தாமதமாக நடத்தப்படுகிறது. மேலும் கலந்தாய்வில் காலிப்பணியிடங்கள் மறைக்கப்படுவதால் ஆசிரியர்கள் கலந்தாய்வின் போது போராட்டங்கள் நடத்துவதும் வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில் இந்த கல்வியாண்டிற்கான இடமாறுதல் கலந்தாய்வு எப்போது நடைபெறும் என இன்னும் கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதுதொடர்பாக ஆசிரியர்களிடம் விருப்ப மனு பெறுவது தொடர்பான அறிவிப்புகளும் வரவில்லை. இதனால் வெளியூர்களில் நீண்ட வருடங்களாக பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் விரக்தியடைந்து மன உளைச்சலில் உள்ளனர். கலந்தாய்வு நடத்துவது குறி...