Posts

Showing posts from July 7, 2016
நாடு முழுவதும் முக்கிய பாடங்களுக்கு ஒரே ’சிலபஸ்’ மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட,புதிய கல்விக் கொள்கையில்,முக்கிய பாடங்களுக்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளது.இது,கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. புதிய கல்விக் கொள்கை குறித்து,ஆதரவும்,எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. முரண்பட்ட பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்,புதிய கல்வி கொள்கைகுறித்து, 28பக்கங்கள் அடங்கிய,முக்கிய சாராம்சங்கள் நிறைந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இதில்,பத்தாம் வகுப்பு வரை,முக்கிய பாடப்பிரிவுகளான,கணிதம்,அறிவியல் மற்றும் ஆங்கில பாடத்துக்கு,ஒரே பாடத்திட்டம் கொண்டு வரப்படும். சமூக அறிவியல்,மொழிப்பாடம் மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கு,மாநில அரசுகளே பாடத்திட்டத்தை உருவாக்கலாம் என குறிப்பிட்டுள்ளது. இதை செயல்படுத்தினால்,நாடு முழுவதும் எவ்வித ஏற்றத்தாழ்வு இன்றி,மாணவர்களின் கல்வித்திறன் மேம்பட வாய்ப்பாக இருக்கும் என்பது,பலரது கருத்தாக உள்ளது. மேலும்,அடிப்படைகல்வித்தரம் உயரும் பட்சத்தில்,மேல...
ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் 1,062 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1,062 முதுகலை பட்டதாரிஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள், அரசு நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் காலியாகக் கிடக்கும் ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தி நிரப்பிவருகிறது. இந்த வருடம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,062 முதுகலைபட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாகஉள்ளன. அந்த இடங்களை நிரப்ப பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஏற்கனவே ஆசிரியர்தேர்வு வாரியத்திற்கு கடிதம் எழுதி உள்ளார். இதையொட்டி ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் 1,062 முதுகலைஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளது. அதுபோல அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 450 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட உள்ளது.
ஆசிரியர்களை கண்காணிக்க புது 'சாப்ட்வேர்' தமிழக அரசு பள்ளிகளின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி விவரங்களை, பள்ளிக்கல்வித்துறை மாவட்ட வாரியாக கணக்கு எடுத்துள்ளது. இந்த விவரங்கள், பள்ளிக்கல்வி துறை செயலகத்துக்கு அனுப்பப்பட்டு, 'சாப்ட்வேர்' மூலம், கணினியில் பதிவு செய்யப்படுகின்றன. இந்த, 'சாப்ட்வேர்' மூலம், அனைத்து கல்வி மாவட்டங்களின் தேர்ச்சி விவரங்களும் புள்ளி விவரத்துடன் பதிவு செய்யப்படுகின்றன. பள்ளி வாரியாக, ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி சதவீதம் கணக்கிடப்பட்டுள்ளது.இதன் பின், எந்த பள்ளியில், எந்த பாடத்தில் தேர்ச்சி விகிதம் கடுமையாக குறைந்துள்ளது; ஒரு மாணவனின் தேர்ச்சி குறைய எந்த பாடம் காரணம்; அதற்கான ஆசிரியர் யார் என்ற விவரங்கள்,கணினியில் சேகரிக்கப்படுகின்றன. இந்த பட்டியலின் படி, சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியரின் செயல்பாடு கண்காணிக்கப்பட்டு, அவரின் பணிகள், வகுப்பு நடத்தும் முறை, கற்பித்தல் ஈடுபாடு ஆகியவையும் ஆய்வு செய்யப்படும். அந்த ஆசிரியர் சரியாக பணி செய்யாவிட்டால், அவருக்கு, 'நோட்டீஸ்' கொடுத்து விளக்கம்கேட்கவும்; ஆர்வமான ஆசிரியராக இருந்தால் அவ...
ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்களிடையே... ஆர்வமில்லை! மூன்று நாள் கவுன்சிலிங்கில் 4 பேர் சேர்க்கை. கடலுார் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இந்த ஆண்டு 'டல்' அடித்து வருகிறது. மூன்று நாள் நடந்த கவுன்சிலிங்கில் 4 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். கடலுார் மாவட்டத்தில் 20 தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளும், ஒரு அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனமும் இயங்கி வருகிறது. இது தவிர கடலுார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கென தனியாக ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் நடப்பாண்டு முதல் செயல்பட வுள்ளது. ஆரம்ப பள்ளிகளில் வேலைவாய்ப்பு குறைந்துள்ள காரணத்தாலும், பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றவுடன், பிளஸ் 2, பொறியியல், மருத்துவம் போன்ற உயர் கல்வியில் சேர ஆர்வம் அதிகரித்துள்ளதால் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர மாணவ மாணவியர்கள் ஆர்வமில்லாமல் உள்ளனர். குறிப்பாக இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதை விட கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். இதனால் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், தொழில் பயிற்சி ...