பள்ளிக்கல்வி இணை இயக்குநர் திரு.அ. கருப்பசாமி அவர்கள் மெட்ரிக் பள்ளி இயக்குநராகவும், திரு.முத்து பழனிச்சாமி அவர்கள் முறை சாரா பள்ளி இயக்குநராகவும் பதவி உயர்வு. பள்ளிக்கல்வி இணை இயக்குநர் திரு.அ. கருப்பசாமி அவர்கள் மெட்ரிக் பள்ளி இயக்குநராகவும், திரு.முத்து பழனிச்சாமி அவர்கள் முறை சாராபள்ளி இயக்குநராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
Posts
Showing posts from July 6, 2016
- Get link
- X
- Other Apps
தமிழ்நாடு: அரசு வேலைக்கு காத்திருப்போர் 83.33 லட்சம் தமிழகத்தில் அரசு வேலைக்காக 83.33 லட்சம் பேர் வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்திருப்பதாக தமிழக அரசின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு வேலைக்காக பதிவு செய்து விட்டு காத்திருக்கும் 83.33 லட்சம் பேரில் 42.72 லட்சம் பேர் பெண்கள், 4.71 லட்சம் பேர் பொறியியல் பட்டதாரிகள், 6.47 லட்சம் பேர் ஆசிரியர்கள், 4.49 லட்சம் பேர் கலை பிரிவினர், 6.07 லட்சம் பேர் அறிவியல் பட்டதாரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்ட மேற்படிப்பு முடித்து விட்டு அரசு வேலைக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் 2.66 லட்சம் பேர் எனவும், பட்ட மேற்படிப்பு முடித்த பெறியியலாளர் 2.31 லட்சம் பேர் என தமிழக அரசின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Get link
- X
- Other Apps
பட்டதாரி ஆசிரியர் நியமனம் இந்த ஆண்டு கிடையாது. அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களில் பணி ஓய்வு பெறுவோர் சொற்ப அளவில் உள்ளதாலும், காலிப் பணியிடங்களும் இல்லை என்பதாலும் புதியதாக இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்க முடியாத நிலையில் பள்ளிக் கல்வித்துறை உள்ளது. கடந்த10 ஆண்டுக்கு முன்பு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள்நியமனம் செய்யும் போது, வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் சுமார் 32 ஆயிரம் பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர். 2010ம் ஆண்டுக்கு பின்னர் ஆசிரியர் நியமனம் செய்ய போட்டித் தேர்வு வைக்கப்பட்டது. அதன்படி இரண்டு கட்டமாக 40 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டித் தேர்வுநடத்தப்படவில்லை.தற்போது மீண்டும் ஆட்சி அமைத்துள்ள அதிமுக அரசு, அரசுஉயர்நிலை மேனிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவித்து இருந்தது. அதற்கான பணிகளை தொடங்கியுள்ள நிலையில், ஏற்கெனவே நீதிமன்றத்தில் போட்டித் தேர்வு குறித்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால் இந்த ஆண்டு போட்டித் தேர்வு நடக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
- Get link
- X
- Other Apps
DTEd :டிப்ளமோ ஆசிரியர் படிப்பு 10 ஆயிரம் இடங்கள் காலி டி.டி.எட்., எனப்படும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்வதற்கான ஆர்வம், மாணவர்களிடம் குறைந்து வருகிறது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி என, 396 டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில், 13 ஆயிரத்து, 830 இடங்கள் உள்ளன. இவற்றில் சேர, இந்த ஆண்டு வெறும், 3,500 விண்ணப்பங்களே வந்துள்ளன.இதில், 3,170 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கான கலந்தாய்வு, நேற்று முன்தினம் துவங்கியது;9ம் தேதி வரை நடக்கிறது. மிகக் குறைந்த விண்ணப்பங்கள்வந்ததன் மூலம், இந்த ஆண்டு, 10 ஆயிரத்து, 660 இடங்கள் காலியாக உள்ளன. அதனால், இந்த கல்லுாரிகளில் ஆசிரியர் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளது. தனியார் கல்லுாரிகளில், தற்காலிக ஆசிரியர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளனர். அதேபோல், பல தனியார் கல்லுாரிகள், டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு முழுக்கு போடவும் முடிவு செய்துள்ளன. இதுகுறித்து, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர் க.மீனாட்சிசுந்தரம் கூறியதாவது: தமிழகத்தில் ஆசிரியர் படிப்பை முடித்து, எட்டு லட்சம் பேர் பணி