Posts

Showing posts from July 5, 2016
தமிழக அரசு மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வை (Teacher's eligibility Test) நடத்தாமல் இருப்பது கவலையளிப்பதாக இருக்கிறது- மு.க.ஸ்டாலின் இந்திய அரசின் கட்டாயக் கல்விச்சட்டத்தின் அடிப்படையில் ஆசிரியர் நியமனத்திற்கான தகுதித் தேர்வினை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த வேண்டும். ஆனால், தமிழக அரசு மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வை (Teacher's eligibility Test) நடத்தாமல் இருப்பது கவலையளிப்பதாக இருக்கிறது. மத்திய அரசு உத்தரவின்படி 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில் இப்படி மூன்று வருடங்களுக்கு மேல் தகுதித் தேர்வை நடத்தாமல் இருப்பது வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் எண்ணற்ற இளைஞர்களின் வாழ்வை இருள் சூழ வைத்துள்ளது. குறிப்பாக அதிமுக ஆட்சியில் கடந்த மூன்று வருடங்களாக பட்டப் படிப்பு முடித்தவர்கள் இத்தேர்வை எழுத முடியாமல் தவிக்கிறார்கள்.ஏற்கனவே ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கழக ஆட்சியில் நியமிக்கப்பட்டு, 2016 வரை இந்த தகுதி தேர்...
வழக்குகளால் ஸ்தம்பிக்கும் பள்ளிக்கல்வித்துறை கல்வித்துறையில், சட்ட நுணுக்கம் அறியாத அலுவலர்களிடம் வழக்குகள் சார்ந்த பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், மாநில அளவில் நிலுவை வழக்குகள், அவமதிப்பு வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. கல்வித்துறையில் ஆசிரியர் நியமனம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு, தகுதித்தேர்வு, பள்ளி இடப்பிரச்னைகள் உட்பட தனிப்பட்ட நபர், குழு என பல்வேறு வழக்குகள் தினமும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. வழக்குகள் அதிகரிக்க, தெளிவில்லாத அரசாணை, துரித செயல்பாடுகள் இன்மை , அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக அமைந்துள்ளது. இவ்வழக்குகளை, கையாள சட்ட நுணுக்கங்கள் தெரிந்தவர்கள் பள்ளிக்கல்வித்துறையில் இல்லை என்பது அவலம். கடந்த ஆண்டு, மாவட்ட வாரியாக சட்ட வல்லுனர்கள் நியமிக்கப்படுவார்கள் என இயக்குனர் அறிவித்திருந்தார். ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும், இந்த வழக்குகளை முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம் என, தனித்தனி உதவியாளர்கள் கவனிக்கின்றன...