Posts

Showing posts from July 4, 2016
'இனி ஆசிரியர்களுக்கும் Exam! Pass ஆகாவிட்டால் ஊதிய உயர்வு கட்!; மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான புதிய கல்வி கொள்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஒவ்வொருஆசிரியரின் தகுதி மற்றும் திறனை சோதிக்கும் வகையில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலானபுதிய கல்வி கொள்கையைவெளியிட்டுள்ளது. அதில் மாணவர்கள் கல்வி திறனை வளர்க்க ஆசிரியர்களுக்கு ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்துள்ளது. இந்தியாவில் பள்ளி ஆசிரியர்களின் திறமையின்மையால், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் மற்றும் திறன் குறைவாக இருக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் தகுதியும், திறமையும் உள்ள ஆசிரியர்களை தேர்வு செய்ய தனியாக ஆசிரியர் தேர்வு வாரியம் அமைக்க வேண்டும். தகுதி தேர்வின் அடிப்படையில்தான் புதிய ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும். (தமிழகத்தில் ஏற்கனவே இந்த நடைமுறை இருக்கிறது). அனைத்து ஆசிரியர் கல்வி நிறுவனங்களும் இனி மத்திய அரசின் அங்கீகாரத்தை கண்டிப்பாக பெற வேண்டும். தேசிய அளவில்...
TET:3 ஆண்டுகளாக நடத்தப்படாத ஆசிரியர் தகுதித் தேர்வு.இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் கவலை! மத்திய அரசு திட்டமிட்டபடி, ஆண்டுக்கு 2 தடவை ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு காலமாக தகுதித் தேர்வு நடத்தப் படாமல் உள்ளது. இதனால், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித் தவர்களும், பி.எட். பட்டதாரிகளும் கவலை அடைந்துள்ளனர். மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கடந்த 23.8.2010 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றாக வேண்டும்.கேந்திரீய வித்யாலயா பள்ளிகள், நவோதயா வித்யாலயா பள்ளிகள், மத்திய திபெத்திய பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேருவதற்கு ‘சி-டெட்’ எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விலும், அதேபோல்குறிப்பிட்ட மாநிலத்தில் உள்ள பள்ளிகள் எனில் அந்தந்த மாநில அரசுகள் நடத்தும் தகுதித் தேர் விலும் (டெட்) தேர்ச்சி பெற வேண் டும். தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தும் பொறுப்பு ஆச...