Posts

Showing posts from July 3, 2016
நான்காண்டு பி.எட். படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு: மத்திய பள்ளிக் கல்வித் துறை திட்டம்? நாடு முழுவதிலும் 4 ஆண்டு ஒருங் கிணைந்த பி.எட் பட்டப்படிப்புகள் கடந்த ஆண்டு முதல் தொடங்கப் பட்டுள்ளன. தமிழகத்தில் இன்னும் கொண்டுவரப்படவில்லை. இப் படிப்புக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர் பயிற்சிக் கல்விக்கான தேசிய கவுன்சில் (என்சிடிஇ) சார்பில், டெல்லியில் ‘பிராக் ஷிக் ஷக்’ எனும் ஆசியர்களுக்கான கல்வி இணையதள தொடக்கவிழா நடந்தது. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இணையதளத்தைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் சுபாஷ் சந்திரா குந்தியா பேசியதாவது: ப்ளஸ் 2 முடித்த பின் ஒருங் கிணைந்த பிஎட் கல்வியில் சேர விரும்பும் மாணவர்களில் சிறந்தவரை தேர்ந்தெடுக்க தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு பலனளிக்கும். இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி கருத்து கேட்கப்படும். நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் போதுமான அளவில் திறமையான ஆசிரியர்கள் இல்லை. ‘ஆக்ஸ்பாம்’ அமைப்பின் புள்ளி விவரப்படி, நாட்டில் 5 லட்சம் ஆசிரியர் பணியிட...
அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி. வகுப்புகள்: 4 மாதங்களுக்குள் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி. ஆகிய வகுப்புகள் தொடங்குவது குறித்து, 4 மாதங்களில் பரிசீலித்து முடிவெடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசின் ஆரம்பப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் இல்லாததால், தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும் நிலையுள்ளது. 2009-ஆம் ஆண்டு இலவச, கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படியும், 2006-ஆம் ஆண்டு சமச்சீர் கல்வி தொடர்பாக தமிழக அரசால் அமைக்கப்பட்ட முத்துக்குமரன் குழுவானது வழங்கிய பரிந்துரையின்படியும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை அரசுப் பள்ளிகளில் தொடங்க வேண்டும் என்றுவிருத்தாசலத்தில் உள்ள மாணவர் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்தனர். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்குரைஞர், "அங்கன்வாடி மையங்களில், 5 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளைச் சேர்...
'ஓபி' அடிக்கும் ஆசிரியர்களுக்கு 'செக்' : இடமாறுதல் கவுன்சிலிங்கில் புதிய விதிகள் அமல்? தமிழகத்தில் ஆசிரியர் இடமாறுதலில், புதிய விதிமுறைகளை கொண்டு வரவும், இடமாறுதல் கவுன்சிலிங்கை, ஆகஸ்ட் மாதம் நடத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும், மே மாதம் இடமாறுதலுக்கான விருப்ப கலந்தாய்வு நடத்தப்படும். ஆனால், சில ஆண்டுகளாக, ஜூன், ஜூலையில் தான் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் எப்போது நடக்கும் என, ஆசிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதுகுறித்து புதிய முடிவுகளை, தமிழக பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டுள்ளது. சொந்த ஊர் : தற்போது பள்ளிக்கல்வி செயலகத்தில், புதிய விதிகளை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. வழக்கமான விதிகளில், பல மாற்றங்களை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பல ஆசிரியர்கள், தங்கள் சொந்தஊர் கொண்ட மாவட்டத்தில் ஆண்டுக்கணக்கில் முகாமிட்டு, 'ஓபி' அடிக்கும் நிலையை மாற்றலாமா என ஆலோசிக்கப்படுகிறது. அதற்காக ஒவ்வொரு ஆசிரியரும், ஒரு குறிப்பிட்ட மண்டலத்தில், குறிப்பிட்ட ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என, கட்டுப்பாடு வர...