Posts

Showing posts from July 1, 2016
புதிய கல்விக் கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும்: அன்புமணி மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கல்வியாளர்கள் குழுவைக் கொண்டு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:- மத்திய அமைச்சரவையின் முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையிலான வல்லுனர் குழு தயாரித்துள்ள புதிய கல்விக் கொள்கையை மக்களின் கருத்தை அறியும் நோக்கில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான குழு கல்வியாளர் தலைமையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள ஐவரில் 4 பேர் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள், ஒருவர் மட்டுமே கல்வியாளர் ஆவார். புதிய கல்விக் கொள்கையில் சில சாதக அம்சங்கள் உள்ள போதிலும், பாதகமான அம்சங்கள்தான் நிறைய உள்ளன. உயர்கல்விக்குத் தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு அவசியம் என்பதால், நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டத்தை அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்பதை ஏற்க முடியாது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான தரம் கொண்ட பாடத்திட்டம் இருக்கலாம். ஆனால், ஒர...
எழுத்துத் தேர்வின் அடிப்படையில் ஆய்வக உதவியாளர் நியமனம்: மு.க.ஸ்டாலின் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் ஆய்வக உதவியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:- தமிழகம் முழுவதும் உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு 2015-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. அதில் 8 லட்சம் பேர் பங்கேற்றனர். எழுத்துத்தேர்வில் பங்கேற்றவர்களில் ஒரு பதவிக்கு 5 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 25 மதிப்பெண்ணுக்கு நேர்காணல் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. இதனால் 150 மதிப்பெண்ணுக்கு எழுதப்பட்ட எழுத்துத் தேர்வுக்கு மதிப்பற்றுப் போகுமோ என்று தேர்வெழுதியோர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இதுபோன்ற பணிகளுக்கு நேர்காணல் மூலம் நியமனம் செய்வது முறைகேட்டுக்கு வழிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் எழுத்துத் தேர்வு நடைபெற்று ஓராண்டாக்கு மேலாகியும் அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை. பணி நியமனம...
TNPSC:VAO தேர்வு முடிவு வெளியீடு 813 கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவுகள்இன்று வெளியிடப்ட்டுள்ளது.2014 -15-ஆம் ஆண்டிற்கான 813 கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு கடந்த ஆண்டு நவம்பர் 12 -ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு இதற்கான எழுத்துத் தேர்வை 2016 பிப்ரவரி 28 -ஆம் தேதி நடத்தியது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இந்நிலையில் இன்று 813 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.தேர்வு முடிவுகள் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ. http://www.tnpsc.gov.in /results.htmlஎன்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
பெயரளவில் ஆங்கில வழி கல்வி; அரசின் நோக்கம் வீண்.   அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி பெயரளவில் மட்டும் நடைபெறுவதால், தகுதியான ஆசிரியர்களை நியமித்து மாணவர்களுக்கு ஆங்கில புலமை கிடைக்கும் விதமாக கல்வி முறையை மாற்ற பெற்றோர் விரும்புகின்றனர். ஆங்கில வழி கல்வியை ஊக்குவிப்பது நல்லதல்ல,தாய்மொழி கல்வியே சிறந்தது என சமூக ஆர்வலர்கள் கூறிவந்தாலும், காலத்தின் மாற்றத்தால் ஆங்கில புலமை இன்றியமையாததாக மாறிவிட்டது. தாய் மொழியில் கல்வி கற்றாலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் புலமை பெறாமல் இருப்பின் எதிர்காலம் பாதிக்கப்படும். அரசு பள்ளி ஆசிரியர்கள் கூட தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆங்கில வழி பள்ளிகளுக்கே அனுப்புகின்றனர்.வருவாய் தடங்கல் ஏழை மக்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. வருவாய்க்கு ஏற்றவாறு குழந்தைகளை அரசு பள்ளிக்கு அனுப்பினால் எதிர்காலம் பாதித்து விடுமோ என்ற ஏக்கம் ஒருபுறம்,ஆங்கில பள்ளிகளில் குழந்தைகளை அனுப்ப வருவாய் தடங்கல் மறுபுறம் என பரிதவிக்கின்றனர். இதை கருதி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை அரசு துவங்கியது. மாணவர்களின் சேர்...
விடைத்தாள் திருத்தத்தில் தவறு : ஆசிரியர்களுக்கு தண்டனை இல்லை. ஆசிரியர் சங்கங்களின் நெருக்கடியால், விடைத்தாள் திருத்தத்தில்  தவறு செய்த ஆசிரியர்கள் மீதான தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் தயாரித்தல், விடைத்தாள் திருத்தம், தேர்வறை கண்காணிப்பு பணி, தேர்வு மைய ஆய்வுப் பணி போன்ற அனைத்திலும், அரசு பள்ளிஆசிரியர்களே பெரும்பாலும் ஈடுபடுகின்றனர். \ இந்நிலையில், சமீபத்தில் முடிந்த பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் போன்றவற்றில்,  பல மாணவர்களுக்கு மதிப்பெண்கள் மாறியுள்ளன. பிளஸ் 2 தேர்வில்,  2,278 பேரும், 10ம் வகுப்பு தேர்வில், 450 பேரும் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். எனவே, இந்த விடைத்தாள்களைதிருத்திய  ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, தேர்வுத் துறை முடிவு செய்து, அவர்களின் பட்டியலை தயாரித்தது. இதையறிந்த ஆசிரியர் சங்கங்கள், போராட்டம் நடத்துவோம் என,  தகவல் அனுப்பின. ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போல், சம்பந்தப்பட்ட விடைத்தாள் மைய கண்காணிப்பாளர், முதன்மை கல்வி...
இனி 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி:வரைவு கல்விக் கொள்கையை வெளியிட்டது மத்திய அரசு   அனைவரும் கட்டாயத் தேர்ச்சி திட்டம் இனி ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே செயல்படுத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கட்டாயத் தேர்ச்சி திட்டம் எட்டாம் வகுப்பு வரை செயல்படுத்தப்படுகிறது. எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி பெறச் செய்வதால் மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்படுகிறது. இதனால் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய வரைவு கல்விக் கொள்கையின் ஒரு பகுதியை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள், கல்வியாளர்களின் கருத்துக்களைக் கேட்பதற்காக இந்த வரைவு கொள்கையின் ஒரு பகுதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு கருத்துக்கள், யோசனைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு அனுப்ப ஜூலை 31 கடைசி தேதியாகும். இந்த விவரம் ஜ்ஜ்ஜ்.ம்ட்ழ்க்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. வரைவு கல்விக் கொள்கையில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங...