10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவு இணையத்தில் வெளியீடு. தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 25-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 93.6 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதையடுத்து மாணவர்கள் தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கல்வித்துறை அறிவித்தது. அதன்படி, தேர்ச்சி பெறாத மற்றும் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாகவும் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தனர். இதையடுத்து அவர்களின் விடைத்தாள்கள் தனியாக பிரித்து எடுக்கப்பட்டு மறுகூட்டல் செய்யும் பணி நடைபெற்றது. இப்பணி முடிவடைந்த நிலையில், இன்று அவர்களின் மறுகூட்டலுக்கு பிந்தைய மதிப்பெண்களுடன் கூடிய பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. www.tndge.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் மறுகூட்டல் மதிப்பெண்களை அறிந்துகொள்ளலாம்.
Posts
Showing posts from June 30, 2016
- Get link
- X
- Other Apps
இந்த ஆண்டு முதல் 200க்கு பதில் 100 தான் பி.எட் கல்லூரிகளில் செய்முறை தேர்வு மதிப்பெண் திடீர் குறைப்பு இந்த ஆண்டு முதல் பி.எட் கல்லூரிகளில் செய்முறை தேர்வின் மதிப்பெண் 200க்கு பதில் 100 ஆக குறைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் பி.எட் படிப்பு ஓராண்டாக இருந்தது. இந்த ஆண்டு முதல் இப்படிப்பு 2 ஆண்டாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான புதிய பாடப்புத்தகங்கள் பி.எட் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கீழ் 690 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான பி.எட் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பாடத்திட்டத்தின் கீழ் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இந்நிலையில் முதலாம் ஆண்டு செய்முறை தேர்வுக்கான மதிப்பெண் முறை குறித்து பி.எட் கல்லூரிகளுக்கு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் 15 விதமான செய்முறை தேர்வுகளுக்கு 200 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தியரி என்ற கருத்தியல் தேர்வுகளுக்கு 900 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆண்டில் செய்முறை மதிப்பெண்ணான 200 மதிப்பெண்ணி...
- Get link
- X
- Other Apps
'குரூப் - 2 ஏ' தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு . தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, 'குரூப் - 2 ஏ' பிரிவு தேர்வில் தேர்வானவர்களுக்கு, அடுத்த மாதம், 4ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது. தமிழக அரசு துறையில், குரூப் - 2 ஏ பிரிவில், நேர்முக தேர்வு அல்லாத பணிகளில், 1,676 காலியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. ஜன., 24ல் நடந்த தேர்வில், 6.54 லட்சம் பேர் பங்கேற்றனர். இதன் முடிவுகள், ஜூன் 8ல் வெளியிடப்பட்டன. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. தேர்வானவர்களுக்கு, ஜூலை 4ம் தேதி முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். பின், தரவரிசை, காலியிடம் மற்றும் இடஒதுக்கீட்டு விதியின்படி, கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதம், தபாலில் அனுப்பப்பட்டு உள்ளது. இணையதளத்திலும், அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- Get link
- X
- Other Apps
சென்னை பல்கலை தேர்வு இன்று 'ரிசல்ட்' வெளியீடு. சென்னை பல்கலையின் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.இதுகுறித்து, பல்கலையின் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி திருமகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த ஏப்ரலில் நடந்த, இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புக்கான தேர்வு முடிவுகள், ஜூன், 30ல் வெளியாகின்றன. மாணவர்கள், www.results.unom.ac.in/, www.ideunom.ac.in/மற்றும் egovernance.unom.ac.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவை அறியலாம். முதுகலை படிப்புக்கான தேர்வர்கள், மறுமதிப்பீடுக்கும், இளங்கலை படிப்புக்கான தேர்வர்கள், மறுகூட்டலுக்கும், நாளை முதல், வரும், 8ம் தேதி வரை, இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இளங்கலை மாணவர்கள், ஆறாவது பருவ தேர்வில், ஒரு பாடத்தில் மட்டும் தோல்வி அடைந்தாலோ, முதுகலை மாணவர்கள், 4வது பருவ தேர்வில், ஒரு பாடத்தில் மட்டும் தோல்வி அடைந்தாலோ, உடனடி துணைத்தேர்வுக்கு, ஜூலை, 1ம் தேதி முதல், 8ம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். உடனடி துணைத்தேர்வு, ஜூலை, 23ம் தேதி, மூன்று மையங்களில் மட்டும் நடக்கும். இவ்வாறு...