Posts

Showing posts from June 28, 2016
272 விரிவுரையாளர் பணியிடங்கள்: டிஆர்பி அறிவிப்பு தமிழகம் முழுவதும் 2016 - 2017 -ஆம் ஆண்டுக்கான 272 விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர், மூத்த விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது.. மொத்த இடங்கள்:272. பணி - காலியிடங்கள் விவரம்:. பணி: Senior Lecturers-38. சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,700. பணி: Lecturers - 166. சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,800. பணி: Junior Lecturers - 68. சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,800. தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு மற்றும் புவியியல் துறையில் முதுகலை பட்டத்துடன் எம்.எட் முடித்திருக்க வேண்டும்.. தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.. விண்ணப்பக் கட்டணம்:அனைத்து பிரிவினருக்கும் ரூ.50. விண்ணப்பிக்கும் முறை:தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள தலைமை கல்வி அதிகாரி அல...
3,500 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் - தமிழகம் முழுவதும் காலி. தமிழகம் முழுவதும் 3,500 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பதால், மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவின் பேரில் ஒரு ஆசிரியர் இரண்டு அல்லது மூன்று பள்ளிகளுக்குச் சென்று பாடம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பாடங்களும் முழுமையாக நடத்த முடியாமல் போவதால், கல்வித் தரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்களும், பள்ளி ஆசிரியர்களும் தெரிவிக்கின்றனர்.. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சுமார் 3,500 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அரசு அண்மையில் அறிவித்தது.. இந்தப் பணியிடங்களில் 1,750 இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்தும் போட்டித் தேர்வு மூலமாகவும், மீதமுள்ள 1,750 இடங்கள் பதவி உயர்வு மூலமும் (50:50) நிரப்பப்படுகின்றன.காலியான பணியிடங்கள் மட்டும் கடந்த ஆண்டு பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டன. ஆனால், போட்டித் தேர்வு மூலம் பணியிடங்கள்...
10ம் வகுப்பில் தோல்வி? : நாளை துணை தேர்வு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் சில தேர்வில் பங்கேற்காதவர்களுக்கு வாய்ப்பு தரும் வகையில், சிறப்புஉடனடி துணைத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் உடனடி துணைத் தேர்வு துவங்கி, ஜூலை, 6ல் முடிகிறது. தமிழ் அல்லாத பிறமொழியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு, விருப்ப மொழி தேர்வு, ஜூலை, 8ல் நடத்தப்படுகிறது.இந்த தேர்வுக்கு, ஜூன், 18 முதல் இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில், மீண்டும் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய, அரசு தேர்வுத் துறை வாய்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு தகவல் தொகுப்பு மைய இணையதளமான www.tngdc.gov.in என்ற தளத்தில், விண்ணப்பதாரர்கள், தங்களின் மார்ச் மாத தேர்வுக்கு வழங்கப்பட்ட பதிவெண் மற்றும் பிறந்த தேதியைபதிவு செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.