Posts

Showing posts from June 24, 2016
CTET:மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு செப்.18 ல் நடக்கிறது மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு செப்.,18ல் நடக்கிறது. ஜூலை 18 வரை 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம் என, மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.சி.,) தெரிவித்துள்ளது. இதில் தேர்ச்சி பெறுவோர் கேந்திரிய வித்யாலயா, நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை கற்பிக்க முடியும். ஒன்று முதல் 5 ம் வகுப்பு ஆசிரியராகபணிபுரிய முதல் தாளையும், ஆறு முதல் 8 ம் வகுப்புக்கு 2ம் தாளையும் எழுத வேண்டும். ஒருவரே இரு தாள்களையும் எழுதலாம். முதல்தாள் எழுத பிளஸ் 2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் 2 ஆண்டு தொடக்க கல்வி பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இரண்டாம் தாள் எழுத பட்டப்படிப்புடன் 2 ஆண்டு தொடக்க கல்வி பட்டயப்படிப்புஅல்லது பி.எட்., முடித்திருக்க வேண்டும். ஓ.பி.சி., பிரிவினர் ஒரு தாள் மட்டும் எழுத ரூ.600, இரு தாள்களைஎழுத ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்.சி.,-எஸ்.டி.,- மாற்றுத்திறனாளிகள் ஒரு தாளுக்கு ரூ.300, இரு தாள்களுக்கு ரூ.500 செலுத்த வேண்டும். விபரங்களுக்கு www.ctet.nic.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளல...
தமிழகத்தில், பள்ளி கல்வித் துறையின் செயல்பாடுகள், மிக மோசமாக உள்ளதாக மத்திய அரசு, 'டோஸ்' விட்டுள்ளது. மத்திய அரசின் நிதி உதவி திட்டங்களை அமல்படுத்தாமல் கிடப்பில் போட்டு விட்டதாக, துறையின் செயலர் சபிதாவை நேரில் அழைத்து கண்டித்ததுடன், அவருக்கு கடிதமும் அனுப்பியுள்ளது. அனைத்து மாணவர்களும், 10ம் வகுப்பு வரை கட்டாயம் படிக்க வேண்டும் என்ற நோக்கில், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த தேவையான நிதியை, மத்திய அரசு வழங்குகிறது. கடந்த, இரு ஆண்டுகளில் மட்டும், 1,700 கோடி ரூபாய்க்கு மேல், தமிழக அரசுக்கு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டப்படி, மாநில அரசின் செயல் பாடுகளை ஆய்வு செய்து, அதன்படி, பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. தமிழகத்தில் பல கல்வித் திட்டங்களை கிடப்பில் போட்டு, அலட்சியமாக இருந்ததால், பள்ளிக்கல்வி செயலர் சபிதாவை டில்லிக்கு அழைத்து, மத்திய மனித வள அமைச்சக அதிகாரிகள் கண்டித்துள்...