ஆசிரியர் படிப்பில் ஆர்வம் குறைகிறது இழுத்து மூடப்படும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள். போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால் ஏராளமான இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளன. தமிழகம் முழுவதும் அரசு சார்பில் 29மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 38 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், 320 சுயநிதிஆசிரியர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 13 ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் இப்படிப்பில் சேர்க்கப்பட்டு இடைநிலைஆசிரியர் பணிக்கு (ஒன்றாம் வகுப்பு முதல்ஐந்தாம் வகுப்பு வரை) பணியமர்த்தப்பட்டு வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்தால்தான் ஆசிரியர் பணி என்ற தமிழக அரசின் அறிவிப்பால் ஆசிரியர் பயிற்சி படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது. மேலும் இடைநிலைஆசிரியர் காலிப் பணியிடங்களும் மிகக் குறைந்த அளவே உள்ளதால் கடந்த சில ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் படிப்பிற்கு வரவ...
Posts
Showing posts from June 16, 2016
- Get link
- X
- Other Apps
பிளஸ் 2 துணை தேர்வுக்கு இன்று முதல் 'ஹால் டிக்கெட். பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், இன்று முதல், 'ஹால் டிக்கெட்'களை பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர், நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:பிளஸ் 2 உடனடி தேர்வுக்கு, 'தத்கல்' உட்பட அனைத்து வழியிலும், விண்ணப்பித்தவர்கள் இன்று முதல், தங்கள், 'ஹால் டிக்கெட்'களை, www.tngdc.gov.in இணையதளத்தில், வரும் 18ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். 'ஹால் டிக்கெட்' இல்லாதவர்களுக்கு, தேர்வு எழுத அனுமதி இல்லை. விண்ணப்பதாரர்கள், தங்களின் மார்ச் மாத பொதுத்தேர்வுக்கான பதிவு எண் மற்றும் பிறந்த தேதி மூலம், 'ஹால் டிக்கெட்'டை பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- Get link
- X
- Other Apps
வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு...தடை!: மாணவர்கள் பள்ளிக்கு கொண்டு வரவே கூடாது என எச்சரிக்கை. தமிழகத்தில், துவக்கப் பள்ளி முதல், மேல்நிலைப் பள்ளிகள்வரை, எந்த பள்ளி ஆசிரியர்களும், வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என, தடை விதிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் எக்காரணம் கொண்டும், பள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வரவே கூடாது என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தொடக்க கல்வி இயக்குனர் அறிக்கை: * மாணவர்களின் கவனச் சிதறலை தடுக்கும் வகையில், மாணவர்கள், பள்ளிகளுக்கு மொபைல் போன் கொண்டு வர தடை விதித்து, 2007ம் ஆண்டே அரசாணை கொண்டு வரப் பட்டுள்ளது.இதன் படி, மாணவ, மாணவியர், பள்ளிகளுக்கு மொபைல் போன் கொண்டு வர தடை விதிக்கப் படுகிறது. இதை, ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும் * மீறி யாரும் கொண்டு வந்தால், சம்பந்தப்பட்ட பெற்றோரை அழைத்து, ஆசிரியர்கள் அறிவுரை வழங்க வேண்டும் * வகுப்பறையில் பாடம் நடத்தும்போது, ஆசிரியர்கள் மொபைல்போனை, 'சுவிட்ச் ஆப்' செய்து வைக்க வேண்டும்; மீறினால், ஆசிரியர் கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி கல்வி இயக்குனர் அறிக்கை: *l வகுப்பறையில், ஆசிர...