ஜிப்மர் நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் 17க்கு ஒத்தி வைப்பு. தொழில்நுட்ப காரணங்களால் ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் போஸ்ட் கிராஜுவேட் மெடிக்கல் எஜூகேஷன் அன்ட் ரிசர்ச் (JIPMER) நடத்தும் எம்.பி.பி.எஸ் தேர்வு முடிவுகள் ஜூன் 17-க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.முன்னதாக ஜிப்மர் நுழைவுத்தேர்வு முடிவுகள் ஜூன் 15-க்குள் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தவிர்க்கமுடியாத தொழில்நுட்ப காரணங்களால் தேர்வு முடிவுகள் ஜூன் 17-ம் தேதி வெளியிடப்படும் என்று கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நுழைவுத்தேர்வு, இந்தாண்டு 200 இடங்கள் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், கடந்த ஜூன் 5-ம் தேதி நாடு முழுவதும் 75 நகரங்களில் 275 மையங்களில் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கு 1.5 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Posts
Showing posts from June 15, 2016
- Get link
- X
- Other Apps
50 சதவீதம் அதிகாரிகள் பணியிடம் காலி 'காற்றாடுது' கல்வித்துறை. தமிழக கல்வித் துறையில் முதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) பணியிடங்கள் 50 சதவீதம் வரை காலியாக இருப்பதால், கல்வித்தரம் மற்றும் அரசு நலத் திட்டங்கள் வழங்கும் பணிகள் பாதித்துள்ளன. மாநிலத்தில் 67 பணியிடங்களில், மதுரை, நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி (எஸ்.எஸ்.ஏ.,) உட்பட 30 சி.இ.ஓ.,க்கள் மற்றும் கூடுதல் சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதேபோல் 128 டி.இ.ஒ., பணியிடங்களில் நாகபட்டினம், தேனி (டி.இ.இ.ஓ.,க்கள்), மயிலாடுதுறை, சேலம், கரூர், செங்கல்பட்டு, செய்யாறு (டி.இ.ஓ.,க்கள்) காஞ்சிபுரம் (ஐ.எம்.எஸ்.,) உட்பட 60 பணியிடங்கள் வரை காலியாக உள்ளன. சட்டசபை தேர்தலால் பொதுத் தேர்வை முன்னிட்டு காலிப் பணியிடங்களை நிரப்ப கல்வி அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் மாணவர்களின் கல்வி தரம் ஆய்வு, நிர்வாகப் பணி கண்காணிப்பு, அரசின் 14 வகை நலத் திட்டங்கள் வழங்கும் பணிகள் பாதித்துள்ளன. இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: சி.இ.ஓ., டி.இ.ஓ.,க்கள் பணியிடம் கால...