Posts

Showing posts from June 14, 2016
10-ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வு. 10-ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு ஜுன் 20, 21-ம் தேதிகளில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடத்தப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் அறிவியல் பயிற்சி வகுப்புக்கு 80 சதவீதம் வருகை தந்து செய்முறைத் தேர்வில் கலந்துகொள்ளத் தவறிய பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் ஜுன் 20, 21-ம் தேதிகளில் (திங்கள், செவ்வாய்) நடைபெறும் சிறப்பு துணைத் தேர்வின் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். இதுதொடர்பான முழு விவரங்களையும் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரியை நேரில் அணுகி பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதுகுறித்து தனிப்பட்ட முறையில் தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு அறிவிப்பு ஏதும் அனுப்பப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது
TNPSC: 4,931 காலிப் பணியிடங்களை நிரப்ப அக்டோபர் மாதம் குரூப்-4 தேர்வு-ஜூலை மாதம் அறிவிப்பு வெளியாகிறது.  இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் 4,931 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அக்டோபர் மாதம் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் வெளியாகிறது.  தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவி யாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் மற்றும் வரித்தண்டலர், வரைவாளர் உள்ளிட்ட பதவிகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வை எழுத குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும். தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பணி களுக்கு மட்டும் கூடுதலாக தொழில்நுட்ப கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.இந்த ஆண்டு மேற்கண்ட பணிகளில் 4,931 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அக்டோபர் 16-ம் தேதி குரூப்-4 தேர்வு நடத்தப்படும் என்றும் இதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் 3-வது வாரத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி வெளி யிட்டுள்ள வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையில் குறிப் பிடப்பட்டுள்ளது. இதை மனதில்கொண்டு தமிழகம் முழுவதும்