மின்வாரிய பணியிடங்களுக்கான தேர்வு: `ஹால் டிக்கெட்' பதிவிறக்கலாம். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காலிப்பணியிடங்களுக்காக நடைபெறும் தேர்வுகளுக்கன, தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை இணயதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாக நடத்தப்படும் இந்தத் தேர்வுகள் ஏற்கெனவே மே 22-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.இதையடுத்து ஜூன் 19, ஆகஸ்ட் 27, 28 தேர்வுகள் நடைபெறும்என அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் ஜூன் 19-ஆம் தேதி தட்டச்சர், இளநிலை தணிக்கையாளர், உதவி வரைவாளர் ஆகிய பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுகளுக்கான தேர்வுக்கூட அனுமதிசீட்டை (ஹால் டிக்கெட்) www.tangedcodirectrecruitment.in Download செய்து கொள்ளலாம். இதுதொடர்பானமேலும் விவரங்களுக்கு 044- 2235 8311, 2235 8312 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Posts
Showing posts from June 13, 2016
- Get link
- X
- Other Apps
புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்கக் கூடாது: பொது பள்ளி மேடை அமைப்பு வலியுறுத்தல். மத்திய அரசு பரிந்துரைக்கும் புதிய கல்விக் கொள்கையை, மக்களிடம் கருத்து கேட்காமல் தமிழக அரசு ஏற்கக் கூடாது என்று பொது பள்ளி மேடை அமைப்பு செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறினார். திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியது: மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைத்து, புதிய கல்விக் கொள்கை தொடர்பான பரிந்துரைகளைப்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்தப் பரிந்துரைகளின் உள்ளடக்கத்தை இதுவரை மக்களுக்குத் தெரிவிக்கவில்லை. எனவே, அதன் மீது பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. அனைத்துத் தரப்பினரிடமும் கருத்துகளைப் பெற்ற பின்னர்தான், புதிய கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும்.பன்முக பண்பாட்டைக் கொண்டாடக் கூடிய கல்வி முறைதான் இந்தியாவுக்கு தேவை. கல்வி வளாகமும், வகுப்பறையும் மதச்சார்பற்ற இடம். எனவே, கல்வியில் வணிகமயம், வகுப்புவாதம் கூடாது. அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை வலுப்படுத்த வேண்டுமே தவிர, தனியாரை அனுமதித்து, கல்வியை வியாபாரப் பொருளாக்கக் கூடாது. கல்விக் கொள்கையை உருவாக்க மாநி...