Posts

Showing posts from June 11, 2016
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு செய்முறை பயிற்சிக்கு இன்று முதல் மாணவர்கள் பதிவு செய்யலாம்   வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு செய்முறைப் பயிற்சிக்கு மாணவர்கள் வியாழக்கிழமை முதல் பதிவு செய்யலாம் என புதுச்சேரி முதன்மைக் கல்வி அலுவலர் நா.ராமலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 2017-ல் மார்ச், ஏப்ரலில் நடைபெற உள்ள எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள அனைத்து நேரடி மற்றும் தனித்தேர்வர்களும் (முதன் முறையாக அனைத்துப் பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்களும், ஏற்கனவே 2012-க்கு முன்னர் பழையப் பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்று அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்கு பெயர் பதிவு செய்யாத தனித்தேர்வர்களும்) அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்துக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. எனவே, அனைத்து தனித்தேர்வர்களும் அதற்கான விண்ணப்பங்களை dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை (10.6.16) முதல் 30.6.16 வரை விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், விவரங்...