பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு:ஓராண்டாகியும் 'ரிசல்ட்' இழுபறி தமிழக பள்ளிகளில், ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் முடிந்து, ஓராண்டு ஆகியும், இன்று வரை அதற்கான முடிவுகள் வராததால் தேர்வு எழுதியவர்கள் ஏமாற்றமடைந்து உள்ளனர். தமிழக பள்ளிகளில், ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு, 1983 வரை வேலை வாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை அடிப்படையில், வேலை வழங்கப்பட்டது. 2015ல், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, 10ம் வகுப்பு வெற்றி பெற்றவர்கள், இதற்கான தேர்வெழுதி வெற்றி பெற வேண்டும் என, பள்ளிக்கல்வி துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, கடந்தாண்டு மே, 31ல் நடந்த தேர்வில், 4,362 பணியிடங்களுக்கு, எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வெழுதினர். ஒரு மாதத்தில் முடிவுகள் வெளியாகும் என கூறப்பட்டது. தற்போது, ஓராண்டு கடந்தும் இன்று வரை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இதனால் தேர்வெழுதியவர்கள் விரக்தியில் உள்ளனர்.
Posts
Showing posts from June 6, 2016
- Get link
- X
- Other Apps
பத்தாம் வகுப்புக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்? தமிழக பள்ளிக் கல்வித்துறையில் இதுவரை உள்ள நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டு வருவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு முதுநிலை் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பாடம் நடத்தி வருகின்றனர். மற்ற வகுப்புகளுக்கு இளநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.இந்த நடைமுறையில் சில மாற்றங்களை கொண்டு வர பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. குறிப்பாக பத்தாம் வகுப்புக்கு இனிமேல் முதுநிலை பட்டதாரிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளது. நடுநிலைப் பள்ளிகளை பொறுத்தவரை பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதுடன், பதவி உயர்வு மூலமும் பட்டதாரிகளை நியமிக்கும் வழக்கம் இருந்து வந்தது. அதை மாற்றி பணி நிரவல் மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளிகளுக்கு நியமிக்கவும் திட்டமிட்டுள்ளது.
- Get link
- X
- Other Apps
TNTET:தகுதித்தேர்வு நிபந்தனை காத்திருக்கும் ஆசிரியர்கள்... தமிழக அரசுப் பள்ளிகளில், 'டெட்' (ஆசிரியர் தகுதித்தேர்வு) நிபந்தனையுடன் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு காலஅவகாசம் நிறைவு பெறும் நிலையில், அரசின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில், 'டெட்' தேர்வுக்கான நடைமுறைகள், 2010ல் அமல்படுத்தப்பட்டன. 2010 ஆக., 23ம் தேதிக்குபின், அரசுப் பள்ளிகளில் பணியில் சேர்ந்தவர்களுக்கு, 'டெட்' தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. கடந்த, 2010ல், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் அரசுப் பள்ளிகளில், ஒரே அரசாணை மற்றும் காலிப் பணியிடங்களை காண்பித்து, ஐந்து கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்தி, 3,665 பேர் பணியில் சேர்க்கப்பட்டனர். அந்த ஆண்டு மே மற்றும் ஆக., மாதம் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களுக்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்களிக்கப்பட்டது. மற்ற, 1,665 பேர் தேர்ச்சி பெற, 2012 முதல் 2016 நவ.,மாதம் வரையான கால அவகாசத்தை தமிழக அரசு அளித்தது. ஆனால், 2012, 2013ம் ஆண்டுகளுக்கு பின்,