10-ஆம் வகுப்பு சிறப்பு துணை பொதுத் தேர்வு: நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் சிறப்பு துணைப் பொதுத் தேர்வுக்கு புதன்கிழமை (ஜூன் 1) முதல் சனிக்கிழமை (ஜூன் 4) வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. ஜூன் 29-ஆம் தேதி முதல் தேர்வு: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத, வருகை தராத மாணவர்களுக்கான சிறப்பு துணைப் பொதுத் தேர்வு ஜூன் 29-ஆம் தேதி முதல் ஜூலை 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.இந்த சிறப்பு துணைப் பொதுத் தேர்வை எழுத, தாங்கள் படித்த பள்ளி மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் மூலம் ஆன்லைனில் மட்டுமே மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும். தேர்வுக் கட்டணம்: தேர்வுக் கட்டணம் ரூ.125, ஆன்-லைன்பதிவுக்கட்டணம் ரூ.50 சேர்த்து மொத்தம் ரூ. 175-ஐ ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் பள்ளிகளிலேயே பணமாக மட்டுமே செலுத்த வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் விநியோகம்: தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்கள் பின்னர் ...
Posts
Showing posts from May 31, 2016