Posts

Showing posts from May 24, 2016
நாளை 10ம் வகுப்பு 'ரிசல்ட்' பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்  புதன்கிழமை (மே 25) காலை 9.31 மணிக்கு வெளியிடப்படுகின்றன. இந்தப் பொதுத்தேர்வு மார்ச் 15 முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம், புதுவையில் 10.72 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளன.  தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டுஆகியவற்றை www.tnresults.nic.in,   www.dge1.tn.nic.in,  www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் பதிவு செய்து முடிவுகளை பெறலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.இதுதவிர, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய, கிளை நூலகங்களில் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறியலாம்.  மேலும், மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தெரிந்துகொள்ளலாம். தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: தேர்வு எழுதிய மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கு ஜூன் 1-ஆம் தேதி முதல் தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தாங்களே பதிவிற...
100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதை கட்டணத்தை எப்படி கணக்கிடுவது? தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் ஜெயலலிதா அனைவருக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவில், “ மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதால் தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும். இதன் காரணமாக அரசு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 1,607 கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கும். இந்தச் சலுகை 23.5.2016 முதல் நடைமுறைப்படுத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சலுகை யாருக்கெல்லாம் பொருந்தும், மின் கட்டணத்தை எப்படி கணக்கிடுவது என்பது குறித்து தமிழக மின்வாரிய உயரதிகாரிகள் கூறியதாவது:தற்போது, முதல் 100 யூனிட் பயன்படுத்தும் நுகர்வோருக்கு ஒரு யூனிட் கட்டணம் ரூ.3. இதில் தமிழக அரசு மானியம் ரூ.2 போக மீதமுள்ள ஒரு ரூபாய் மட்டும் நுகர்வோரிடம் வசூலிக்கப்படுகிறது. மேலும் கட்டணத்தில் 1 முதல் 100 யூனிட்டுகளுக்கு ஒரு ரூபாயும், 101 முதல் 200 யூனிட்டுக்கு ரூ.1.50ம் வசூல் செய்யப்படுகிறது. அதுவே501 ...