Posts

Showing posts from May 22, 2016
தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் : டிஎன்பிசி மீது குற்றச்சாட்டு  கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வு முடிவுகளை வெளியிடாமல் இழுத்தடித்து வருவதாக,தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மீது தேர்வு எழுதியவர்கள் புகார்தெரிவித்துள்ளனர்.கடந்த 2014-ம் ஆண்டு நடத்திய குரூப்-4 தேர்வு, 2015-ம் ஆண்டுநடத்திய குரூப்-1 தேர்வு, நேர்முகத்தேர்வு இல்லாத குரூப்-2 தேர்வு மற்றும் கடந்து ஆண்டு நடந்த ஆய்வக உதவியாளர் தேர்வு என இத்தேர்வுகளை மொத்தம் 20லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர்.  தேர்வு முடிவுகள் வெளியிடுவதில்தொடரும் கால தாமதத்தால் தேர்வர்கள் பல மாதங்களாக காத்திருக்கும் நிலைஏற்பட்டுள்ளது. எனவே மேலும் காலம் தாழ்த்தாமல் தேர்வு முடிவுகளை வெளியிடவேண்டும் என்று தேர்வு எழுதியவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை துணைமேயர் பெஞ்சமின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பெஞ்சமின் (வயது 47) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆனார்.1988 முதல் 1990 வரை அயனம்பாக்கம் கிளைச் செயலாளராகவும், 2002 முதல் 2015 வரை வில்லிவாக்கம்ஒன்றிய செயலாளராகவும் இருந்துள்ளார் பெஞ்சமின். கடந்த 2011-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி 145-வது வார்டு மாமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற இவர், தற்போது வரை சென்னை மாநகராட்சியின் துணை மேயராக பதவிவகித்து வருகிறார். இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மதுரவாயல்(தனி) தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வென்றார். அவருக்கு பள்ளிக்கல்வித்துறை, விளையாட்டு, இளைஞர் நலன் இலாக்கா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.