தி.மு.க., தேர்தல் அறிக்கைக்கு பாராட்டு கண்காணிப்பு வலையில் ஆசிரியர்கள் 'பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வரும்' என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பலர், தி.மு.க., பிரமுகர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதி வருகின்றனர். எனவே, அ.தி.மு.க., மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் சார்பில், ஆசிரியர்களை கண்காணிக்க துவங்கியுள்ளனர்.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 'ஜாக்டோ, ஜாக்டா' என போராட்டம் நடத்திய ஆசிரியர் சங்கங்கள், பல ஆண்டுகளாக பழைய ஓய்வூதியதிட்டத்தை நடைமுறைப் படுத்த கோரிக்கை விடுத்து வருகின்றன. தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரும்' என, அறிவித்துள்ளதால், ஆசிரியர் சங்கங்கள் உற்சாகத்தில் உள்ளன. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொது செயலர் மீனாட்சி சுந்தரம் வெளியிட்ட அறிக்கை யில், 'தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இ...
Posts
Showing posts from April 15, 2016