Posts

Showing posts from April 8, 2016
எஸ்பிஐ வங்கியில் 17140 பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு  வங்கி பணிக்காக காத்திருப்போரா நீங்கள்! உங்களுக்கான ஒரு நல்ல செய்தியினை, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான "ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா" தனது வங்கி விரிவாக்கத்திற்கும், வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவையின் தரத்தை உயர்த்தும் வண்ணமாக 17,140 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா" வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூனியர் அசோசியேட்ஸ் (வாடிக்கையாளர் சேவை மற்றும் விற்பனை) பிரிவுக்கு 10,726 பேரை வழக்கமான முறையிலும், ஜூனியர் விவசாய அசோசியேட்ஸ் பிரிவுக்கு 3008 பேரையும், சிறப்பு ஆட்சேர்ப்பு முறையில் 3,406 பேரை ஜூனியர் அசோசியேட் பிரிவுக்கும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் "ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா" வங்கியில் பணியாற்ற சுமார் 17,140 பேருக்கு வாய்ப்பு கிடைக்கும். ஜூனியர் அசோசியேட்ஸ் (வாடிக்கையாளர் சேவை மற்றும் விற்பனை) மற்றும் ஜூனியர் ஜூனியர் விவச
3 பாடங்களுக்கு 'போனஸ் மார்க்' பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், நேற்று துவங்கியது. வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியலுக்கு,மொத்தம், 14 மதிப்பெண்கள் போனசாக வழங்கப்பட்டு உள்ளன.பிளஸ் 2 பொதுத்தேர்வில், முக்கிய பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, நேற்று துவங்கியது. முதல் நாளில், தலைமை திருத்துனர்கள் மற்றும் துறை அலுவலர்கள் மூலம், மாதிரிக்காக ஒவ்வொரு அறையிலும், தலா, 15 விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்பட்டன. நாளை முதல், உதவி விடை திருத்துனர்கள், முழு அளவில் திருத்தும் பணியில் ஈடுபடுவர்.வினாத்தாளில் ஏற்பட்ட பிழை காரணமாக, வேதியியலில், ஆறு மதிப்பெண்; கணிதத்தில், தமிழ் வழி மாணவர்களுக்கு மட்டும், ஆறு மதிப்பெண்; இயற்பியலில், தமிழ் வழி மாணவர்களுக்கு மட்டும், இரண்டு மதிப்பெண், 'போனஸ்' மதிப்பெண்களாக வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளதுமூன்று பாட தேர்வுகளிலும், சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் எழுத முயற்சித்திருந்தால் மட்டுமே, போனஸ் மதிப்பெண் வழங்கப்படும்