Posts

Showing posts from April 3, 2016
மூடுவிழாவுக்கு தயாராகும் பி.எட்., கல்லூரிகள்:மாணவர் சேர்க்கை சரிவால் தடாலடி முடிவு. தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பணி வாய்ப்பு குறைந்ததாலும், பி.எட்., படிப்பு இரண்டு ஆண்டாக மாற்றியதாலும், அப்படிப்பின் மீதான ஆர்வம் வெகுவாக சரிந்துள்ளது. மாணவர் சேர்க்கை நடத்த முடியாத பல பி.எட்., கல்லுாரிகள் நடப்பு கல்வியாண்டுடன் மூடுவிழா நடத்தவும் தயாராகி வருகின்றன. தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ், தமிழகம் முழுவதும், 726 பி.எட்., கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், ஆண்டுதோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழக அரசு பள்ளிகளில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.எட்., முடித்தவர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், பி.எட்., படிப்பதில் மாணவ, மாணவியரிடையே ஆர்வம்அதிகமாக இருந்தது. அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை விடவும் அதிகம் கொடுத்து, படிக்கவும் போட்டிகள் இருந்தது. ஆனால், அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், ஆண்டுக்காண்டு உபரிஆசிரியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இதனால், ...