Posts

Showing posts from March 29, 2016
2016 ஆம் ஆண்டுக்கான பி.இ. சேர்க்கை: இணைய வழி மட்டுமே 2016-17 கல்வியாண்டு பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஆன்-லைனில் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. வழக்கமான விண்ணப்பம் விநியோகிக்கும் முறையை தவிர்த்து, இணையதளம் மூலம் மட்டுமே இந்த ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கை நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் www.annaunivtnea.edu என்ற இணையதளம் மூலம் மட்டுமே விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். இதன் காரணமாக அச்சடிக்கப்பட்ட காகித வடிவிலான விண்ணப்ப விநியோகம் இருக்காது என்றும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் கணேசன் அளித்த பேட்டி: பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க முதன் முறையாக ஆன்-லைன் மூலம் மட்டுமே விவரங்களைப் பதிவு செய்யும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி மேம்பட்டுள்ள இந்த கால கட்டத்தில், விண்ணப்பப் படிவத்தைப் பெறுவதற்காக மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவதையும், நீண்ட வரிசையில் காத்திருப்பதையும் தவிர்...