10ம் வகுப்பு 'தியரி' தேர்வு: புதிய அறிவிப்பு பத்தாம் வகுப்பில் செய்முறை தேர்வுக்கு வராதவர்களுக்கு அறிவியல் பொதுத்தேர்வு எழுத அனுமதி இல்லை' என தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தமிழ் மற்றும் பிறமொழி பாடங்களுக்கான தேர்வுமுடிந்துள்ளது. 22ம் தேதி ஆங்கிலத்தேர்வு துவங்குகிறது; ஏப்ரல் 7ல் அறிவியல் தேர்வு நடக்க உள்ளது. இந்நிலையில் அனைத்து பள்ளிகளுக்கும் அரசு தேர்வுத்துறை இணை இயக்குனர் அமுத வல்லி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதில், '10ம் வகுப்பு அறிவியல் தேர்வு எழுத வரும் மாணவர் அல்லது தனித்தேர்வர் யாராக இருந்தாலும் செய்முறை தேர்வை எழுதியிருக்க வேண்டும். இல்லையெனில் அவர்களை அனுமதிக்க வேண்டாம். 'தியரி' எனப்படும் கருத்தியல் தேர்வு மட்டும் தேர்ச்சிக்கான கணக்கில் எடுத்து கொள்ளப்படாது என, ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
Posts
Showing posts from March 20, 2016
- Get link
- X
- Other Apps
பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டு பணி: புறக்கணிக்கும் ஆசிரியர்களால் அவதி சேலம்: விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு, ஆசிரியர்களை அனுப்ப மறுக்கும், தனியார் பள்ளிகளின் போக்கு, கல்வித்துறை அலுவலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில், எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். இவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக, மாவட்டங்களுக்கு, இரண்டு முதல், நான்கு மையம் வரை அமைக்கப்பட்டுள்ளது.இதில், மதிப்பீட்டு பணியை தாமதமின்றி முடிக்க, உதவி தேர்வு மதிப்பீட்டார் பணிக்கு, சுயநிதி மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், பணிபுரியும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களும் நியமிக்கப்படுகின்றனர். ஆனால், அதற்கான ஆணை பெற்றும், பல முகாம்களில் பங்கேற்காமல், பல்வேறு விளக்கங்களை அளித்து வருகின்றனர். இதற்கு தனியார் பள்ளி நிர்வாகமும் ஒத்துழைப்பது கல்வித்துறை அலுவலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:பள்ளி மாணவர்களுக்கான பிளஸ் 2 தேர்வு நடந்து வரும் நிலையில், பள்ளியில் உள்ள பணிகளை கவனிக்கவே, ஆசிரியர்களை தனியார் நிர்வாகம் வலியுறுத்துகிறது. மதிப்...