போனஸ் மதிப்பெண் உண்டா?10ம் வகுப்பு தமிழ் 2ம் தாளில் பிழை. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ், இரண்டாம் தாளில் பிழையாகவும், பாடத்திட்டத்துக்கு வெளியில் இருந்தும் கேள்விகள் இடம் பெற்றதால், போனஸ் மதிப்பெண் வழங்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ், இரண்டாம் தாளுக்கு, நேற்று முன்தினம் தேர்வு நடந்தது. மொத்தம், 100 மதிப்பெண்களுக்கு, 41 கேள்விகள் இடம் பெற்று இருந்தன. இதில், ஐந்து கேள்விகள், மாணவர்களை குழப்பும் வகையில் இருந்தன ஒரு கேள்வியே தவறாக இருந்தது ஒரு கேள்வியில், பாட புத்தகத்துக்கு வெளியில் உள்ள அம்சங்கள் இடம் பிடித்திருந்தன. ஒரு மதிப்பெண்ணுக்கான, 12வது கேள்வி, உவமையை உருவகமாக மாற்றுமாறு கொடுக்கப்பட்டிருந்தது. அதில், 'விழி கயல்' என்ற வார்த்தை இடம் பெற்றிருந்தது. ஆனால், 'விழி கயல்' என்ற வார்த்தையே உருவகம் தான் என்பதால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். பாடத்திட்டப்படி, 'கயல்விழி' என்று உவமை கொடுக்கப்பட்டு, 'விழி கயல்' என உருவகமாக மாற்றி எழுத வேண்டும். எனவே, இந்த கேள்விக்கு, ஒரு மதிப்பெண் போனஸ் வழங்க கோரிக்கை எழுந்துள...
Posts
Showing posts from March 18, 2016