Posts

Showing posts from March 4, 2016
டி.இ.டி., சலுகை; டேக்டோ வலியுறுத்தல் ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) அரசு அறிவித்த 5 சதவீதம் சலுகை மதிப்பெண்ணுக்கு எதிரான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என கல்வித்துறை செயலர் சபிதாவிடம், தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (டேக்டோ) வலியுறுத்தியது. டேக்டோ ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப 2012 ஜூனில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 150 மதிப்பெண்ணுக்கு 90 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதன் பின் நடந்த தேர்வில் 5 சதவீதம் சலுகை மதிப்பெண் அறிவிக்கப்பட்டு, 82 மதிப்பெண் பெற்றாலே பணிநியமனம் செய்யலாம் என அரசின் கொள்கை முடிவு அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிராக சிலர் நீதிமன்றம் சென்றதால் அரசு உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இவ்வழக்கை துரிதமாக நடத்தி முடிக்க கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பயனடைவர். இதுகுறித்து செயலர் சபிதாவிடம் விளக்கினோம். சலுகை மதிப்பெண் தொடர்பாக சிறப்பு அரசாணை பிறப்பிக்கவும் வலியுறுத்தினோம். நடவடி
1,063 முதுகலை ஆசிரியர்கள் நியமனம்:விரைவில் டி.ஆர்.பி., தேர்வு. ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் 1,063 முதுகலை ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.2016--17ம் கல்வியாண்டில் பணி ஓய்வு பெறுவோர் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடம் உருவாகும் நிலை உள்ளது. இதில் 50 சதவீதம் பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும்.எஞ்சிய 50 சதவீதம் தேர்வு மூலமே நியமிக்க முடியும். பதவி உயர்விற்காக 2002--03 முதல் 2008 வரையிலும் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாடங்களை பொறுத்து பதவி உயர்விற்கு பணி மூப்பு பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் நேரடி நியமன விதிமுறைப்படி 1,063 பேருக்கான டி.ஆர்.பி., எழுத்துத் தேர்விற்கு பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கென சிறப்பு அரசாணை வெளியிட்ட நிலையில், தேர்வுக்கான ஏற்பாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் சட்டசபை தேர்தல் காரணமாக டி.ஆர்.பி., தேர்வு தள்ளி போக வாய்ப்புள்ளது. இல்லையெனில் ஜூன் அல்லது ஜூலையில் தேர்வு நடக்கும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெர
வி.ஏ.ஓ., தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு வி.ஏ.ஓ., தேர்வுக்கான விடைக்குறிப்புகளை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தமிழக வருவாய் துறையில் காலியாக உள்ள, 813, வி.ஏ.ஓ., காலிப் பணியிடங்களுக்கு, கடந்த, 28ம் தேதி தேர்வு நடந்தது. இதில், 10.28 லட்சம் பேர் விண்ணப்பித்து, 7.70 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வின் வினாத்தாள் மிக எளிமையாக இருந்ததாக, தேர்வர்கள் தெரிவித்தனர். இதற்கான விடைக்குறிப்புகள் தேர்வர் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தவறு அல்லது ஆட்சேபனை இருந்தால், மார்ச், 10க்குள், டி.என்.பி.எஸ்.சி.,க்கு தெரிவிக்கலாம்.