Posts

Showing posts from February 27, 2016
TNTET :ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் வருகிற 04.03.2016 அன்று பதிவாளர் கோர்ட் எண்-2 இல் வரிசை எண் 27 ஆக விசாரணைக்கு வருகிறது
Image
TRB RECRUITMENT NOTIFICATION 2016 | மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள SENIOR LECTURER, LECTURER, JUNIOR LECTURER பதவிகளை போட்டித்தேர்வு மூலம் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விளம்பரம் பதிவிறக்கம் செய்யுங்கள் ...
ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது? தேர்வு எழுதிய 8 லட்சம் பேர் காத்திருப்பு. ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு நடந்து முடிந்து, எட்டு மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாததால், தேர்வெழுதிய, எட்டு லட்சம் பேர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள, 4,362 ஆய்வக உதவியாளர் பணிக்கு, கடந்த ஆண்டு மே, 31ல் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது; இதில், எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வில் வெற்றி பெறுவோரில், ஒரு காலியிடத்திற்கு, ஐந்து பேர் என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வு நடத்தி, அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் செய்ய அரசு திட்டமிட்டது. நேர்முகத் தேர்வில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எனப்படும், 'சீனியாரிட்டி'க்கு - 10; உயர் கல்வித் தகுதிக்கு - 5; பணி அனுபவத்துக்கு - 2; நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு - 8 என, மொத்தம், 25 மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவருக்கே பணி ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணை கணக்...
வி.ஏ.ஓ., தேர்வு: வினாத்தாளில் மாற்றம். முறைகேட்டை தடுக்க நாளை (பிப்., 28) நடக்கும் வி.ஏ.ஓ., தேர்வுக்கான வினாத்தாளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 813 வி.ஏ.ஓ., பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வு நாளை நடக்கிறது. முறைகேடுகளை தடுக்க இந்த தேர்வுக்கான வினாத்தாளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. கடந்த காலங்களில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான வினாத்தாள் 'ஏ,''பி,' 'சி,' 'டி' என, 4 விதமாக அச்சடிக்கப்பட்டு வழக்கப்பட்டன.ஒரு தேர்வு அறையில் 20 பேர் அமரும் போது ஒரே விதமான வினாத்தாள் 5 பேருக்கு செல்ல வாய்ப்பு இருந்தது. இதனால் வினாத்தாள்களில் விடைகளை குறித்து, மற்றவர்களுக்கு வழங்குவதாகவும், சைகை மூலம் விடைகளை தெரிவிப்பதாகவும் புகார் எழுந்தது. இதை தடுக்க வி.ஏ.ஓ., தேர்வுக்கான வினாத்தாள் 'ஏ,''பி,' 'சி,' 'டி' என, பழைய முறையில் தயாரிக்கப்படவில்லை. உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வு போன்று சீரியல் எண் மட்டும் உள்ள வினாத்தாள்கள் வழங்கப்பட உள்ளன. இதில் ஒரு அறையில் உள்ள அனைவருக்...
16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்: அரசு நடவடிக்கைக்கு வலியுறுத்தல். அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தில் பணிபுரியும் 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 'டி.இ.டி.,' ஆசிரியர் தகுதி தேர்வின்றி 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் அரசு, அரசு நிதி உதவிபெறும் பள்ளி மற்றும் சிறுபான்மைப் பள்ளிகளில் பணி புரிகின்றனர். மத்திய அரசின் கல்வி உரிமை சட்டம் 2009ல் அமலானது. அப்போது அனைவருக்கும் கல்வி இயக்கம், இடைநிலை கல்வித்திட்டம் போன்றவற்றில் மத்திய அரசின் 75 சதவீத நிதி, மாநில அரசின் 25 சதவீத நிதியுடன் ஆசிரியர்களுக்கான சலுகைகள், 700 தலைமை ஆசிரியர்கள் நியமனம், பள்ளிக் கட்டடங்களை அமைப்பது போன்ற பணிகளுக்கு நிதி வழங்கப்பட்டது. இந்நிலையில் மாநில அரசு கடந்த 2011 ஜன., 15ல் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் குறித்து அரசாணை வெளியிட்டது. அதில் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வில் தேர்வாகியிருக்க வேண்டும். அல்லது அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் 'டி.இ.டி.,' தகு...