வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளர்களே உஷார்... வாட்ஸ்ஆப் மூலம் தனி நபர் பற்றிய வங்கிக் கணக்கு எண், இமெயில் முகவரி போன்ற தனிப்பட்ட விபரங்களை சேகரித்து, அதனை பயன்படுத்தி மோசடி செய்வது தெரிய வந்துள்ளது. இது குறித்த எச்சரிக்கையை தகவல் தொடர்பு துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: உங்கள் நண்பரின் வாட்ஸ்ஆப் எண்ணில் இருந்து வருவது போன்று உங்களுக்கு ஒரு "லின்க் (link)" அனுப்பப்படும். அதனுள் சென்றால், உங்களுக்கு அந்த சலுகை தரப்படும், இந்த சலுகை கிடைக்கும் என ஆசை காட்டி, உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் கேட்பார்கள். போலி இணையதளங்களை பயன்படுத்தி, உங்கள் போனில் மார்வேர் மென்பொருள் மூலம் ஊடுருவி, உங்களைப் பற்றிய தகவல்களை வைத்து மோசடி செய்வார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியாவில் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோர் அதிகம். உலகம் முழுவதிலும் சுமார் பல நுாறு கோடி பேர் வாட்ஸ்ஆப்., பயன்படுத்துகிறார்கள். அதிகரித்து வரும் வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளர்களை குறிவைத்தே இந்த மோசடி ...
Posts
Showing posts from February 7, 2016
- Get link
- X
- Other Apps
TET : தகுதித் தேர்வை பூர்த்தி செய்யாத பள்ளி ஆசிரியருக்கும் சம்பளம்: உயர்நீதிமன்றம் உத்தரவு 'தகுதித் தேர்வை பூர்த்தி செய்யாவிட்டாலும், உச்சநீதிமன்ற வழக்குமுடிவுக்கு வரும்வரை, சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியருக்கு, சம்பளம் வழங்க வேண்டும்,' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. துாத்துக்குடி மேலதட்டப்பாறையில் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் டி.என்.டி.டி.ஏ., துவக்கப் பள்ளி உள்ளது. இடைநிலை ஆசிரியராக 2012 ஆக.,2 ல் எஸ்தர் நியமிக்கப்பட்டார். இதை அங்கீகரிக்கக் கோரி கல்வித்துறைக்கு, பள்ளி நிர்வாகம் விண்ணப்பித்தது. 'ஆசிரியர் தகுதித் தேர்வில் எஸ்தர் தேர்ச்சி பெறாததால், நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது,' என கல்வி அதிகாரிகள் நிராகரித்தனர். எஸ்தர் மற்றும் பள்ளி தாளாளர், 'பணி நியமனத்தை தற்காலிகமாக அங்கீகரித்து, சம்பளம் வழங்க உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதை அனுமதித்து ஜன.,4 ல் தனிநீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர், துவக்கக் கல்வி இயக்குனர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுதகுதித் தேர்வை, தேசிய ஆசிரி...