Posts

Showing posts from February 4, 2016
எச்சரிக்கை எளிமையாக இருக்காது பொதுத்தேர்வு மாணவர்களுக்கு தேர்வுத்துறை எச்சரிக்கை 'மழை, வெள்ள பாதிப்பால், பிளஸ் 2, மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாள் எளிமையாக இருக்கும் என எண்ண வேண்டாம்' என, தேர்வுத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். வெள்ள பாதிப்பு: கடந்த ஆண்டு இறுதியில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலுார் மாவட்டங்களிலும், திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களின் சில பகுதிகளிலும் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது; ஒரு மாதம் பள்ளிகள் இயங்கவில்லை. பாட புத்தகங்கள், நோட்டுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், மார்ச் 4ல், பிளஸ் 2, மற்றும் மார்ச் 15ல், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன. 'வெள்ள பாதிப்பால், பொதுத் தேர்வு வினாத்தாள்கள் எளிமையாக இருக்கும்' என, பெற்றோர், மாணவர்கள்மற்றும் சில பள்ளிக ளின் ஆசிரியர்களிடம் தகவல்கள் பரவுகின்றன. இதுகுறித்து தேர்வுத்துறையில் விசாரித்த போது,'மழை, வெள்ள பாதிப்புக்கும் பொதுத் தேர்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே, வினாத்தாள...