Posts

Showing posts from January 30, 2016
மாநிலம் முழுவதும் ஆசிரியர் போராட்டம்; 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் இன்று ஆசிரியர் கூட்டமைப்பினர் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடந்த இந்த போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் . மத்திய அரசு ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வலியுறுத்தல், 6வது ஊதிய குழு பரிந்துரைத்த படிகள் வழங்க வேண்டும் , புதிய பென்சன் திட்டத்தை கைவிட வலியுறுத்தல், தாய்வழி தமிழ் பாடத்தை முதல் பாடமாக அறிவிக்க வேண்டும், ஒப்பந்த அடிப்படை மற்றும் தொகுப்பூதிய நியமனத்தில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல், தமிழ் வழிக்கல்வி திட்டத்தை செயல்படுத்துதல் , மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பள்ளிகள் மூடப்படுவதற்கு எதிர்ப்பு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு ஆசிரியர் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு ஜேக்டோ சார்பில் இன்று முதல் 3 நாள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர் . இதனால் இன்று மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட கலெ...
வி.ஏ.ஓ., தேர்வு இருப்பதோ 800; 10 லட்சம் பேர் போட்டிடி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வி.ஏ.ஓ., பதவியில், 813 காலியிடங் களுக்கு, பிப்., 28ம்தேதி தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கு, 10 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.இதில், சரியான முறையில் விவரங்கள் அளித்து, தேர்வுக்கட்டணம் செலுத்திய மற்றும் கட்டண சலுகை பெற்ற விண்ணப்பதார்களின் விவரம், www.tnpscexams.net இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. விண்ணப்ப எண் அல்லது பயனாளர் குறியீட்டை பதிவு செய்து, விவரம் அறியலாம்.