2016ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு மூலம் 5013 பணியிடங்கள் நிரப்பப்படும்: அருள்மொழி 2016 ஆம் ஆண்டில் தமிழக அரசின் 33 துறைகளில் காலியாக உள்ள 5,513 பணியிடங்கள் வரும் ஆண்டில் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டிற்கான திட்ட அறிக்கையை தேர்வாணையத்தின் தலைவர் கே.அருள்மொழி இன்று (ஜன.29) வெளியிட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக அரசின் 33 துறைகளில் காலியாக உள்ள 5,513 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல்முறையாக சுற்றுலா வளர்ச்சித்துறையில் 5 அதிகாரி பணியிடத்தில் 5 காலியிடங்களும், எல்காட் நிறுவனத்தில் 12 துணை மேலாளர் பணியிடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. குருப் 3 பிரிவில் நேர்காணல் இல்லாத பணியில் 36 பணியிடமும், குருப் 4 பிரிவில் 4,931 காலியிடங்கள் என 5,513 பணியிடங்கள் நிரப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய 9 தேர்வுகள் கனமழையின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டன. அவற்றிக்கான தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. கடந்த அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி பதவ
Posts
Showing posts from January 29, 2016
- Get link
- X
- Other Apps
டிஎன்பிஎஸ்சி 2016ம் ஆண்டிற்கான தேர்வுகள் அட்டவணை வெளியீடு 2016ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி சார்பில் 9 தேர்வுகள் நடைபெற உள்ளதாக அதன் தலைவர் அருள்மொழி கூறியுள்ளார். சென்னையில், 2016ம் ஆண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டது. பின் பேசிய டிஎன்பிஎஸ்சி தலைவர் அருள்மொழி பேசியதாவது, குரூப் 4 தேர்வுகளின் மூலம் 4,931 பேரும், துணை கலெக்டர்களை தேர்ந்தெடுப்பதற்காக குரூப் 1 தேர்வு, கிராம நிர்வாக அலுவலர் தேர்வு உள்ளிட்ட 9 தேர்வுகள், இந்தாண்டு நடைபெற உள்ளதாக அருள்மொழி கூறினார்.